நின்ற தொகுதிகளில் எல்லாம் வென்ற கலைஞரின் முதல் தொகுதியான குளித்தலைக்கு புதியபேருந்து நிலையம் அமைக்கப்படுமா? மூன்று தலைமுறைகளாக போராடும் பொதுமக்கள். புதிய பேருந்து நிலையம் குறித்த ஒரு சிறப்பு கண்ணோட்டம்..
கரூர் மாவட்டம், குளித்தலை பகுதி முழுவதும் தொழில் வளர்ச்சி இல்லாத விவசாயத்தையே நம்பி வாழும் விவசாயிகளும், அதைச் சார்ந்துள்ள விவசாய தொழிலாளர்களும் வாழுகிற பூமியாகும். குளித்தலை அருகே காவிரி நதி ஓடுவதால் விவசாயத்திற்கு ஏற்ற பகுதியாக உள்ளது. பேரூராட்சி நிர்வாகத்தில் இருந்து கடந்த 1995ஆம் ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தரம் உயர்த்தப்பட்டு 22- ஆண்டுகள் ஓடி விட்டன.அப்போதைய மக்கள் தொகை இப்போது இருக்கும் மக்கள் தொகை காட்டிலும், 4- மடங்கு குறைவு.
24 வார்டுகளை கொண்ட குளித்தலை நகராட்சி, தற்போதுள்ள பேருந்து நிலையத்திற்கு 2- நிமிடத்துக்கு ஒரு பேருந்து வந்து செல்லும் நிலையில், குளித்தலை சுற்றி உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு பேருந்து வசதியை உருவாக்கித் தரும் இடமாக குளித்தலை பேருந்து நிலையம் உள்ளது. கரூர் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகராட்சியாகவும் குளித்தலை தான் உள்ளது. அதுமட்டுமின்றி திருச்சிக்கும், கரூருக்கும் இடைப்பட்ட சம இடைவெளியில் உள்ள முக்கிய நகராட்சி என்ற அந்தஸ்து உடைய பெரிய ஊரும் இதுதான்.
தமிழகத்தில், உழுதவனுக்கே நிலம் சொந்தம் என்ற நில உச்சவரம்பு சட்டம், கொண்டுவரக் காரணமாக, இருந்தது, குளித்தலை அருகே உள்ள, நாடு பாதி, நங்கவரம் பாதி,என்ற, பண்ணை நிலச்சுவான்தார்களை எதிர்த்து, பண்ணையார்களுக்கு அடிபணிந்து, குத்தகைக்கு நிலத்தை உழுது வந்த காலத்தில், உழுதவனுக்கு,நிலம் சொந்தம், என்ற வரலாற்று சிறப்புமிக்க போராட் டத்தை, விவசாயிகளுக்கு ஆதரவாக ஏறு பூட்டி உழவு செய்த கலைஞரால் தான், அடிமை நிலைமாறி, நானும் விவசாயி என்னிடமும், அரை ஏக்கர் நிலம் உள்ளது என்ற நிலைக்கு நில உச்சவரம்பு சட்டம் மூலம் உயர்த்தப்பட்ட நிலையை எந்த விவசாயியாலும் மறக்க முடியாது.
அதே கலைஞர், கடந்த 1957-ல் குளித்தலை தொகுதியில் முதன்முதலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து 5- முறை தமிழ்நாடுமுதலமைச்சர். அதுமட்டுமன்றி நின்ற தொகுதிகளில் எல்லாம் வென்றவர் கலைஞர். என்ற சரித்திர சாதனை பட்டியலில் குளித்தலைக்கு என்றைக்கும் இடம் உண்டு. அப்படிப்பட்ட கலைஞரின் முதல் தொகுதியான குளித்தலைக்கு இதுநாள் வரையிலும் ஒரு நகராட்சிக்கு ஏற்ற வகையிலான பேருந்து நிலையம், இல்லை. புதிய பேருந்து நிலையம் வேண்டும் என்பது குளித்தலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
கடந்த 1963ம் ஆண்டு, 1. 22 ஏக்கரில் துவங்கப் பட்ட பேருந்து நிலையம், டானா வடிவில் 2022-லும் 59- ஆண்டுகள் அதே நிலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நீடித்து வருகிறது. தற்போது உள்ள ஆக்கிரமிப்புகளை கருத்தில் கொண்டால், அவ்வளவு இடத்திலும் பேருந்துநிலையம் இயங்குகிறதா என்பது கேள்விக்குறிதான். பேருந்து நிலையம் குளித்தலை கடம்பர் கோவில் நிர்வாகத்தில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானதாகும். இந்த நிலத்தை,குளித்தலை நகராட்சி நிர்வாகம் வாடகை கொடுத்து நடத்தி வருகிறது. நகராட்சி நிர்வாகம் வைத்துள்ள வாடகை பாக்கி தொகை எவ்வளவு தெரியுமா ரூ 50 லட்சம். வாடகை பாக்கியை நகராட்சி நிர்வாகம் செலுத்தக் கோரி இந்து அறநிலையத்துறை சார்பில் நீதிமன்றத்தில் தொடங்கிய வழக்கும் நிலுவையில் உள்ளது. சமீபத்தில் நகராட்சி ஆணையர் கோர்ட்டில் ஆஜராகி அவகாசம் கேட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
புதிய பேருந்து நிலையத்திற்காக, 22 ஆண்டுகள் மூன்று தலைமுறையாக போராடும் மக்களுக்கு, கடந்த ஆண்டு 3ம் வகுப்பு படிக்கும் வி. ஹரிஷ்மிதா என்ற பள்ளிச் சிறுமி, அப்போதைய அதிமுக ஆட்சியின் போது, அப்போதைய முன்னாள் எம்எல்ஏ மாணிக்கத்திடம், ( தற்போதைய எம்எல்ஏ ) கொடுத்த கோரிக்கை மனுவில், என் பாட்டன் போராடி விட்டார். என் தந்தையும் போராடி விட்டார். நானும் போராட்டத்தில் ஈடுபட்டு விட்டேன்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக ஆட்சிக்கு வந்ததும், முதல மைச்சர் மு.க.ஸ்டாலினிடம், நீங்களாவது சட்டமன்ற உறுப்பி னராகி, குளித்தலைக்கு நல்ல பேருந்து நிலையத்தை பெற்றுத்தர வேண்டும் என்று அந்தப் பள்ளி சிறுமி அவர் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருந்தார். சிறுமியின் கோரிக்கை நிறைவேறினால், திமுகவின் சாதனைப் பட்டியலில் அனைத்து வசதிகளும் கொண்ட புதிய பேருந்து நிலையம் என்ற வரலாறும் இடம் பெறும் என்பதில் சந்தேகமில்லை.
-கே.எம்.என்