அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பஜாஜ் பைனான்ஸ் பெயரில் பணம் பறிக்கும் தொலைபேசி கொள்ளையர்கள்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க

தேனி மாவட்டம் போடி சேர்ந்த முத்துராஜா தினசரி காய்கறி மார்க்கெட் அருகாமையில் தையல் கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடை விரிவாக்கத்திற்காக தேனி பழனிசெட்டி பட்டியில் உள்ள பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் லோன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். பஜாஜ் நிறுவனத்தின் கள ஆய்வாளர்கள் அவரது கடையினை பார்வையிட்டு தொலைபேசி எண் ஆதார் கார்டு பேன் கார்டு பாஸ்புக் உள்ளிட்ட ஆவணங்களை பெற்று சென்ற நிலையில் மறுவாரமே லோன் ரிஜெக்ட் ஆனதாக முத்துராஜாவுக்கு தகவல் அளித்தனர்.

இந்நிலையில் முத்துராஜா ஆவணங்களை திரும்ப பெறாமல் இருந்துள்ளார். ஒரு மாதம் கழித்து பிப்ரவரி மாதம் இருபதாம் தேதி காலை 9 மணி அளவில் முத்துராஜா கைபேசிக்கு பஜாஜ் பைனான்ஸ் இல் இருந்து 1 லட்சத்து நான்காயிரம் ரூபாய் தொழில் கடன் வழங்க உள்ளதாக குறுந்தகவல் வந்ததை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்த முத்துராஜா குறுந்தகவல் வந்த தொலைபேசி எண்ணிற்கு அவர்கள் கேட்ட ஆவணங்களை அனுப்பி வைத்தார்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

மேலும் முத்துராஜாவுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் புகைப்படங்களையும் அங்கு வேலை செய்யும் சிலரது அடையாள அட்டையையும் அனுப்பி உள்ளனர். அதைத் தொடர்ந்து மற்றொரு எண்ணில் இருந்து முத்து ராஜாவை அழைத்து உங்களுக்கு தொழில் கடன் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் வேண்டும் என்றால் இன்சூரன்ஸ் தொகை 4850 ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

முத்துராஜா
முத்துராஜா

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

இதனை நம்பி முத்துராஜா 4850 ரூபாயை அவர்கள் அனுப்பிய வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். அதன் பின்பு மீண்டும் அவரை அழைத்து ஒரு தவணை 8500 கட்டினால் பணம் உடனே ஏறி விடும் என கூறியுள்ளனர். முத்துராஜா சற்றும் சிந்திக்காமல் அவர்கள் கூறியபடி கடன் வாங்காமலே ஒரு தவணையை கட்டியுள்ளார் மறுநாள் மீண்டும் இரண்டாவது தவணை கட்டினால் ஏறி விடும் என கூறவே அதையும் தன்னிடம் இருந்த நகைகளை அடகு வைத்து கட்டி உள்ளார். மீண்டும் விடுவார்களா தொலைபேசி கொள்ளையர்கள் மூன்றாவது தவணை கட்ட சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இதனிடையே தான் ஏமாறுவதை உணர்ந்த முத்துராஜா அவர்களிடம் கைபேசியில் தனக்கு கடன் வேண்டாம் எனது பணத்தை திருப்பி கொடுங்கள் என கேட்டுள்ளார் அவர்கள் அதற்கு சலைக்காமல் முத்து ராஜாவை ஏமாற்றும் என்னத்தோடு மூன்றாவது தவணை கட்டினால் பணம் உடனே ஏறி விடும் என தொடர்ந்து தொலைபேசியில் தற்போது வரை அழைத்துக் கொண்டே உள்ளனர். இந்நிலையில் தேனி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் குற்ற பிரிவிற்கு புகார் அளிக்க சென்ற முத்து ராஜா அங்கும் அவருக்கு தொலைபேசி கொள்ளைகளிடம் இருந்து அழைப்பு வந்தது .

அவர்கள் மூன்றாவது தவணை கட்டச் சொல்லி அப்பாவி முத்துராஜாவிடம் வற்புறுத்தியுள்ளனர். புகார் அளிக்க சென்ற இடத்தில் கூட விடாத தொலைபேசி கொள்ளையர்களை பற்றி காவல்துறையினர் தற்போது வரை விசாரணை மேற்கொள்ளாமல் உள்ளனர். இதுகுறித்து நாம் செய்தி சேகரிக்க சென்ற இடத்தில் கூட அப்பாவி முத்துராஜாவை விடாமல் தொடர்ந்து மூன்றாவது தவணை கட்ட சொல்லி அழைப்பு வந்த படி உள்ளது. இதுபோன்ற நூதன கொள்ளையில் ஈடுபட்டு வரும் தொலைபேசி கொள்ளையர்களை பிடித்தால் அவர்களிடம் ஏமாந்த அப்பாவிகளின் முழு விவரம் தெரியவரும்.

முத்துராஜா
முத்துராஜா

கொள்ளையர் ஒருபுறம் இருந்தாலும் கொள்ளை அடிக்க தூண்டுதலாக உள்ள பஜாஜ் நிறுவனத்தின் ஆவணங்களை கொள்ளையர்களிடம் வழங்கியவர்கள் பற்றிய தகவலும் நமக்கு கிடைக்கும். இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் மாவட்ட நிர்வாகமும் சைபர் கிரைம் காவல்துறையினரும் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தினரும் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தால் இதுபோன்று குற்ற செயல்களில் ஈடுபவர்கள் பிடிபடுவார்கள். தொலைபேசி மூலம் கொள்ளை அடிக்கும் முயற்சிக்கும் முட்டுக்கட்டை போடலாம்.  அப்பாவி மக்கள் ஏமாறுவதை தவிர்க்கலாம்.

தனிப்பட்ட நபரின் ஆவணங்கள் ஒரு நிறுவனத்திற்கு வழங்குவதில் எழுந்துள்ள இந்தப் பிரச்சனை சாதாரண விஷயம் அல்ல இவரைப் போன்ற பல்வேறு அப்பாவிகள் ஏமாறுவதற்கான அடித்தளமாக இது அமைந்துள்ளது  இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

-ஜெ.ஜெ

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.