காவலர் உதவி மையம் திறப்பு விழா!
திருச்சி மாவட்டம் தமிழ்நாட்டின் மைய பகுதியாகவும், மற்றும் உலக பிரசித்தி பெற்ற முக்கிய வழிபாட்டு தலங்களான சமயபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவில் ஆகியவைகளை உள்ளடக்கியுள்ளது.
இத்திருச்சி மாவட்டத்தின் 113 ஆவது கண்காணிப்பாளரான செ.செல்வநாகரத்தினம், இகாப கடந்த 06.01.2025 ஆம் தேதி முதல் தற்போது வரை மிகவும் சிறப்பான முறையில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த வருடம் ஜம்போரி என்று அழைக்கப்படும் சாரணர்களுக்கான பயிற்சி மற்றும் ஒருங்கிணைத்தல் நிகழ்வு மத்திய அரசால் தமிழ்நாடு மாநிலத்திற்கென ஒதுக்கப்பட்டு அந்நிகழ்வானது திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிட்கோ பகுதியில் 28.012025 முதல் 03.02.2025 வரை மிகவும் சிறப்பான முறையில் எந்தவித அசம்பாவிதமும் இன்றி நடத்தி முடிக்க அனைத்து பாதுகாப்பு வசதிகளும் திருச்சி மாவட்ட காவல் துறையினரால் செய்து முடிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் பிற மாநில முதலமைச்சர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.
அதுபோல், திருச்சி மாவட்டத்தில் ரவுடிகளின் கொட்டத்தை அடக்கும் விதமாக கடந்த 2025 ஆம் வருடம் மட்டும் 119 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த அளவிலான குண்டர் தடுப்பு நடவடிக்கையின் எண்ணிக்கை இதுவரை திருச்சி மாவட்டம் கண்டிறாத ஒன்றாகும்.
மேலும், சட்ட விரோத செயல்கள் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் பொருட்டு 13 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, தடையில்லா சோதனை மேற்கொண்டதில் அவ்வபோது குற்றவாளிகள் மற்றும் அவர்களிடமிருந்த பெருமளவிலான தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா மூட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வகையான சட்ட விரோத செயல்கள் மற்றும் திருட்டு, கொலை, கொள்ளை போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை திருச்சி மாவட்ட காவல் துறையினர் 24 மணி நேரமும் தொடர் கண்காணித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினரை அனுகும் நோக்கில், தனியார் நிறுவனங்களின் CSR (Corporate Social Responsibility) நிதி பெற்று, கொள்ளிடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொள்ளிடம் ரவுண்டானா மற்றும் திருச்சி-சென்னை- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் பாலத்தின் கீழ்பகுதியில் “காவலர் உதவி மையம்” (Police Assistance Booth) அமைக்கப்பட்டு, இன்று (16.01.2026) டால்மியா சிமெண்ட் செயல் இயக்குநர் திரு. விநாயகமூர்த்தி, லால்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ராஜமோகன் மற்றும் கொள்ளிடம் காவல் ஆய்வாளர் திரு வீரபாண்டியன் ஆகியோர்கள் முன்னிலையில் தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பொதுமக்கள் சேவைக்காக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இக்காவல் உதவி மையம் அனைத்து வகையான சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள CCTV கேமராக்களை மேற்படி மையத்திலிருந்து கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விபத்து மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய ஏதுவாக அமைய பெற்றுள்ளது. மேலும் நெடுஞ்சாலை ரோந்து காவலர்கள் மற்றும் பீட் காவலர்கள் அவ்வப்போது இம்மையத்தை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக மேசை, நாற்காலிகள், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்கள் அவசர மற்றும் ஆபத்து நேரத்தில் காவலர்களை உடனடியாக அனுகும் வகையில் 24 மணிநேரமும் காவலர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட உள்ளார்கள்.
இதுபோல் வருங்காலங்களில் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளில் காவல் உதவி மையம் திறக்கப்படும் என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.











Comments are closed, but trackbacks and pingbacks are open.