NO F.I.R. – NO C.S.R. – போலீஸ் நடத்திய பஞ்சாயத்து – அடுத்தடுத்து அதிரடி நடந்தது என்ன ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சேலம்; புகார் கொடுக்க வந்தவரிடம் பேரம் பேசிய காவல் அதிகாரிகள், வீடியோ- சஸ்பெண்ட் அடுத்தடுத்து அதிரடி.. பின்னணி என்ன?

சேலத்தில் புகார்தாரரிடம் பேரம் பேசி காவல் அதிகாரி ஒருவர் பணம் கையூட்டு பெற்ற சம்பவம் காவல்துறை வட்டாங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Srirangam MLA palaniyandi birthday

சேலம், அஸ்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவர் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஜெ.எம்.ஜெ எனும் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது நெருங்கிய நண்பரான தமிழழகன். இருவரும் தொழில் ரீதியான நண்பர்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தமிழழகன் அவசரமாக பணம் தேவை இருந்ததால், தன் வீட்டு பத்திரத்தை வங்கியில் வைத்து பணம் பெற்றிருந்தார். அதன் மதிப்பு கிட்டத்தட்ட 1 கோடியே 50 லட்சத்துக்கு மேல், கடனை பெற்ற தமிழழகன் மாத மாதம் அதற்கான டியூ அமொண்ட்டை செலுத்தி வந்துள்ளார்.

முழுமையான வீடியோ காண

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

ஒருக்கட்டத்தில் அந்த கடனிலிருந்து விடுபட வேரொரு இடத்தில் பணம் தயார் செய்ய முயற்சித்துள்ளார். இந்த நிலையில் தான் தனது நண்பரான முரளியிடம் உதவி கேட்டுள்ளார். முரளியும் ஒருக்கட்டத்தில் பணத்தை கொடுத்து வங்கியில் இருந்த கடனை அடைத்துள்ளார்.

இந்த நிலையில் தான் தமிழழகன், முரளிக்கு பணத்தை திரும்பி கொடுக்கும் வரை பத்திரத்தை வைத்துக்கொள்ளும்படி சொன்ன வார்த்தையை மீறி, வங்கியில் இருந்த பத்திரத்தை வாங்கிக்கொண்டு குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளார்.

இந்த நிலையில் தான் முரளி, தமிழழகன் மீது புகார் கொடுக்க முடிவு செய்து, மாநகர குற்றப்பிரிவுக்கு சென்று புகார் அளிக்க சென்றுள்ளனர். ஆனால், அங்கு புகாரை ஏற்க மறுத்த அதிகாரிகள், மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்க கூறியுள்ளனர். அங்கு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், தலைமையக காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள காவல் சிறப்பு உதவியாளரான சரவணன்.

சம்பந்தப்பட்ட புகார்தாரர்களிடம் பேசி பிரச்னையை முடித்து கொடுப்பதாகவும், அதற்காக 10 சதவீதம் கமிக்ஷன் தருமாறு கேட்டுள்ளார். இந்த நிலையில் தான் சம்பந்தப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சரவணன் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி வைரலாகியது.

அதன்மூலம் சரவணனை மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

-ஜான்கென்னடி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.