அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

எடப்பாடிக்கு எதிராக சதுரங்க ஆட்டத்தை ஆரம்பித்த திமுக !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

சேலத்தில் எடப்பாடிக்கு எதிராக முன்னாள் அதிமுக புள்ளியை களமிறக்க திட்டமிட்டுள்ளதாம்  திமுக தலைமை. தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாகவே பிளான் போட தொடங்கியுள்ள திமுகவின் வியூகம் பலன் அளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழக எம்.பி. -க்கள் 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடைய உள்ளதால், அந்தப் பதவிக்கு யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு  இருந்தது. 6 சீட்டில் 4 திமுக வசமும், 2 அதிமுக வசமும் உள்ளது. இந்த நிலையில், தன்னிடம் உள்ள 4 சீட்டுகளுக்கான  வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

திமுக ராஜ்யசபா எம்.பி. வேட்பாளர்கள்
திமுக ராஜ்யசபா எம்.பி. வேட்பாளர்கள்

ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக உள்ள வழக்கறிஞர் பி வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், மநீம தலைவர் நடிகர் கமலஹாசன் அவருக்கு ஒரு சீட் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தேர்தல் உடன்பாடு கையெழுத்தாகி இருந்த நிலையில், அது தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 2  இடங்கள் சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ். ஆர். சிவலிங்கம் EX. MLA , கவிஞர் சல்மா ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

இத்தகைய சூழலில், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கத்திற்கு கிடைத்திருப்பது இன்னும்  1 ஆண்டுகளே சட்டமன்றத் தேர்தலுக்கு உள்ளதால், சேலம் மாவட்டத்தில் அமைப்பு ரீதியாக உள்ள 3 திமுக மாவட்ட செயலாளர்களில் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் அமைச்சராக உள்ளார், மற்றும் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் டி எம் செல்வ கணபதி எம்.பி. -ஆக உள்ளார் ஆகையால் மற்றொரு மாவட்ட செயலாளரான எஸ் ஆர் சிவலிங்கத்துக்கு தற்போது மாநிலங்களவை உறுப்பினர் சீட் திமுக தலைமை கொடுத்துள்ளது.

சேலம் அமைச்சர் ராஜேந்திரன்
சேலம் அமைச்சர் ராஜேந்திரன்

சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் 10 தொகுதிகளில் அதிமுகவே வென்றது. வெறும் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் திமுக வென்றது. அந்த ஒரு தொகுதி தற்போது அமைச்சராக உள்ள சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ வழக்கறிஞர் ராஜேந்திரன் 7588 குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார்.

எனவே அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் ஆன சேலத்தை எப்படியாவது இந்த முறை சேலம் திமுக கோட்டையாக மாற்ற வேண்டும் என திமுக பல வியூகங்களை வகுத்து வருகிறது. அதன்படி,  மூன்று மாவட்ட மாவட்ட செயலாளர்களை அதிகார மையத்தில்  வைத்திருக்க வைத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தனது அரசியல் கணக்கை சேலத்தில் ஆரம்பித்து இருக்கிறது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

2026 – சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு எப்படியாவது, கொங்கு மண்டலத்தில் திமுக கை பற்றி விட வேண்டும் என்று திமுக தலைமை தீவிரமாக வேலை செய்து வருகிறதாம்.  சேலம் மாவட்டம் அதிமுகவிற்கு எம்ஜிஆர் காலத்திலிருந்தே அதிமுகவிற்கு சாதகமாக உள்ளதால், எடப்பாடியின் சொந்த மாவட்டமாக சேலம் உள்ளதாலும் அதிமுக இங்கு செல்வாக்கு குறையாமல் இருக்கிறது என கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிச்சாமி - சேலம் இளங்கோவன்
எடப்பாடி பழனிச்சாமி – சேலம் இளங்கோவன்

சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளரான இளங்கோவன் புறநகரை அதிமுகவை ஆக்டிவாக வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் உள்ள11 சட்டமன்ற  தொகுதிகளையும் தட்டி தூக்கி விடுவோம் என்று மனக்கணக்கு போட்டு வைத்துள்ளாராம். காரணம் கடந்த முறை 11 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக கூட்டணியே   10-ல் வென்றது.

“அவன் பொருளை எடுத்து அவனையே போடணும் ஒரு சினிமா பட டயலாக்கை போல”, வரும் தேர்தலில் எடப்பாடி சட்டமன்ற தேர்தலில் பழனிசாமி நிற்கும் தொகுதியில் அவருக்கு சரியான போட்டியை கொடுத்தால், அத்தொகுதியை விட்டு அவரால் வேறு எங்கும் கவனம் செலுத்த முடியாது என்று நினைக்கும் திமுக, எடப்பாடிக்கு எதிராக முன்னாள் அமைச்சரும் தற்போது மேற்கு மாவட்ட செயலாளரான டிஎம் செல்வ கணபதியை  நிறுத்தி டஃப் கொடுக்க நினைக்கிறதாம்.

செல்வகணபதி
செல்வகணபதி

செல்வ கணபதியை பொருத்தவரை அவர் முன்னாள் அதிமுக காரர் என்பதால், பழனிசாமிக்கு எதிராக அவரை நிறுத்தினால் அதிமுக விசுவாசிகளும் அவருக்கு ஓட்டு ஓட வாய்ப்புகள் உள்ளதாகவே கூறப்படுகிறது. ஆனால், செல்வகணபதிக்கு வாய்ப்பு கொடுக்க முடிவெடுத்தால் அதற்கு சிவலிங்கம் தடையாக வந்துவிடக் கூடாது என்று, சிவலிங்கத்தை ராஜ்யசபா எம்.பி.-யாக ஆக்கியுள்ளதாம் திமுக தலைமை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

இந்த நிலையில் தான் சமீபத்தில் சேலம் மேற்கு மாவட்டத்தில் கட்சியின் முன்னாள் பொறுப்பாளர்களை தேர்தல் பொறுப்பு அமைச்சரான ஏ.வ. வேலு சந்தித்துள்ளார். அதில், ”கட்சிக்காரர்களிடம் நீங்கள் அதிருப்தியில் இருப்பது எனக்கு தெரியும். கூடிய விரைவில் உங்களுக்கு நல்ல பதில் வரும். அதனால் நீங்கள் கட்சி வேலையை பார்க்க ஆரம்பியுங்கள்.

எடப்பாடி தொகுதி பொறுப்பாளர்கள் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள் என்றுள்ளார். அதன்மூலம் இந்த முறை சேலம் தேர்தல் களம் என்பது எடப்பாடிக்கு பெரும் நெருக்கடியை கொடுக்கும் என்கின்றனர் அரசியல் உள்வட்டம் அறிந்தவர்கள்.

-மகிழன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.