501 தட்டு சீர்வரிசை பொருட்கள், பணம் மாலை கொடுத்து அசத்திய தாய்மாமன்கள் !
ஐந்து டிராக்டரில் 501 சீர்வரிசை பொருட்கள் – பணம் மாலை மற்றும் ஆடு ஆகிவற்றை மருமகளுக்கு சீர் வழங்கிய தாய் மாமன் மார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள ஜம்புலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் – கனக லட்சுமி தம்பதிகளின் மகள் மதுபாலா. இவரின் பூப்புனித நீராட்டு விழாவை முன்னிட்டு நான்கு தாய்மாமன்மார்கள் 5 டிராக்டர்களில் பூ முதல் பழங்கள் என 501 சீர்வரிசை பொருட்களை வானவேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். மேலும் ரூபாய் நோட்டுகளால் கட்டப்பட்ட பண மாலை மற்றும் ஆடு ஆகிவற்றை மருமகளுக்கு தாய் மாமன்மார்கள் சீராக வழங்கினர். மருமகளுக்கு மேளதாளம் முழங்க வானவேடிக்கைகளுடன் தாய் மாமன்மார்கள் கொண்டு சென்ற சீர்வரிசைகளை அப்பகுதியில் உள்ள மக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.
— மணிபாரதி