அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சிறைத்துறை அதிகாரிகளுக்கு இடையே நடந்த அதிகார மோதல் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

தமிழக சிறைத்துறையில் அடுத்தடுத்து நடந்து வரும் கீழ் அதிகாரிகள் முதல் மேல் அதிகாரிகள் வரையிலான ட்ரான்ஸ்பர் ஒருபக்கம் புழுதியை கிளப்பிச் செல்ல, மற்றொரு புறம் திருச்சியில் இரண்டு பெண் சிறைத்துறை அதிகாரிகளுக்கு இடையே நடந்த மோதல் , உடனடி டிரான்பர் என தமிழக சிறைத்துறையில் பூகம்பத்தை கிளப்பி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறைத்துறை அதிகாரிகளுக்கிடையேயான ஆன்லைன் ஆய்வுக்கூட்டத்தின் போது, சிறைத்துறை டிஜிபி மகேஷ்வர் தயால் திருச்சியில் என்ன பிரச்னை என்று கேட்க, அதற்கு திருச்சி பெண்கள் சிறை சூப்ரண்ட் ருக்மணி ப்ரியா தன்னை கீழே உள்ள அதிகாரி மதிக்கவில்லை  என்றுக் கூறியுள்ளார். உடனே டிஜிபியும் என்ன ’பனிக்ஷ்மெண்ட்’ கொடுக்கலாம் என்று கேட்க, சஸ்பெண்ட் செய்துவிடலாம் என்று கூறியுள்ளார் அந்த பெண் அதிகாரி .

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

உடனே டிஜிபியும் பார்ப்போம் என்று சொன்னவர். மீட்டிங் முடிந்தவுடன் துணை ஜெயிலர் ( பொறுப்பு) சர்மிளாவை அன்று மதியமே  புழல் -2 சிறைக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த அதிரடி ட்ரான்ஸ்பர் பின்னணியினை பற்றி தெரிந்துக்கொள்ள களத்தில் இறங்கினோம்.!

இதுகுறித்து பேசும் சிறைத்துறை வட்டாரங்களைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர். “திருச்சி பெண்கள் சிறையின் சூப்ரண்டாக இருப்பவர் ருக்மணி ப்ரியா. இவர் கடந்த 16.05.2025 -ம் தேதி மாலை 7.00 மணியளவில் சாப்பிடுவதற்காக திருச்சி பஜார் பகுதியில் உள்ள சாப்பாட்டு கடை ஒன்றுக்கு தனது காரில் சாப்பிட சென்றுள்ளார். அப்போது, அங்கு ஏற்கனவே தனது குடும்பத்துடன் சாப்பிட்டுக்கொண்டிருந்த திருச்சி மத்திய சிறையின் (ஆண்கள்) துணை ஜெயிலர் (பொறுப்பு) சர்மிளா என்பரை பார்த்துள்ளார். அவரும் தன் உயரதிகாரியை பார்த்துவிட்டு எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால் தனக்கு கீழ் உள்ள அதிகாரி எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை என்கிற தகவலை சூப்ரண்டண்ட் உடனே டிஐஜிக்கு தெரிவித்துவிட்டார்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

சூப்ரண்ட் ருக்மணி ப்ரியா - துணை ஜெயிலர் ( பொறுப்பு) சர்மிளா
சூப்ரண்ட் ருக்மணி ப்ரியா – துணை ஜெயிலர் ( பொறுப்பு) சர்மிளா

அப்போதே, டிஐஜி பழனியும் சம்பந்தப்பட்ட இருவரையும் அழைத்து விசாரணை செய்துள்ளார். அதில், துணை ஜெயிலர் சர்மிளா எழுந்து நின்று மரியாதை செலுத்தினார் என்பதை சம்பந்தப்பட்ட சூப்ரண்டே ஒத்துக்கொண்டு, நான் அவ்விடத்தில் இருந்து கிளம்பும் வரையிலும் உட்காரமல் தானே இருந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஒருகட்டத்தில் இருவருக்கும் உள்ள பிரச்னையை சரிசெய்ய துணை ஜெயிலர் (பொறுப்பு) சர்மிளாவை, சூப்ரண்ட் ருக்மணி ப்ரியாவிடம் மன்னிப்பு கேட்க வைத்துள்ளார்” என்றனர்.

மேலும் அதனுடன் முடிவடைந்த விசயத்தை மீண்டும் டிஜிபி வரை ருக்மணி ப்ரியா கொண்டு சென்றதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று சிறைத்துறை உளவுப்பிரிவு அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, “திருச்சி பெண்கள் சிறையின் சூப்ரண்டாக இருக்கும் ருக்மணி ப்ரியாவின் குடியிருப்பானது திருச்சி மத்திய ஆண்கள் சிறைக்குள் இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன் இவர்மீது ஒரு புகார் டிஜிபி வரை சென்றது. அதில், இவர் தன் குடியிருப்பு அமைந்துள்ள ஆண்கள் சிறைக்குள் 10 ஆடுகள் , 4 மாடுகள்  சொந்தமாக வைத்து வளர்க்கிறார். அதனை மேய்ப்பதற்கு, பராமரிப்பதற்கு சிறைக்கைதிகளை பயன்படுத்துகிறார் என்பது தான் அந்த புகார். உடனே டிஜிபி அலுவலகத்தில் இருந்து இதனை உடனே விசாரிக்க சிறை விஜிலன்ஸ் பிரிவினருக்கு உத்தரவு வந்தது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

சிறையில் மாடுகள்
சிறையில் மாடுகள்

அப்போது மத்திய சிறையின் பொறுப்பு துணை ஜெயிலராக இருந்தவர் சர்மிளா. இவரிடம் விஜிலன்ஸ் பிரிவினர் விசாரிப்பதற்கு முன்பே, சம்பந்தப்பட்ட சூப்ரண்ட் ருக்மணி ப்ரியா பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அதில், தனக்கு எதிராக எந்தவித அறிக்கையும் கொடுத்திட வேண்டாம் என்பது தான் அது. இதனால் சர்மிளா உண்மையை சொல்ல வேண்டாம் என்று எண்ணியபோது தான், ஏற்கனவே சம்பந்தப்பட்ட உயரதிகாரி வேலூரில் பணியில் இருந்தபோது, சிறை விதிகளுக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டதால், அப்போதைய சிறைத்துறை டிஜிபியாக இருந்த அமரேஷ் பூஜாரி இவர்மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக வேலூரில் இருந்து திருச்சிக்கு டிரான்ஸ்பர் போட்டார் என்கிற விசயம் தெரியவர நேரடியாக சம்பந்தப்பட்ட உயரதிகாரியான ருக்மணி ப்ரியாவிடம் அதிகாரிகள் விசாரனைக்கு மாறாக பொய்யான தகவலை என்னால் தர முடியாது என்பதை கூறியதாக தெரியவருகிறது.

Jail_Tricy
Jail_Tricy

இதனால், கோபத்தின் உச்சிக்கு சென்ற அவர், தான் வைத்திருந்த மாடுகளை சொந்தவூருக்கு இரவோடு இரவாக பார்சல் செய்துள்ளார். அதன்பின் விசாரிக்க வந்த அதிகாரிகளை சரிசெய்து தனக்கு எதிராக செல்ல இருந்த ரிப்போர்ட்டையும் நிறுத்தியுள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த பிரச்னை வெடித்ததன் பின்னனியில் இது கூட இருக்கலாம்” என்றனர்.

இதுகுறித்து துணை ஜெயிலர் (பொறுப்பு) சர்மிளாவிடம் பேசியபோது, “நீதி நியாயம் என்றைக்கும் சாகாது… நான் எந்த தவறும் செய்யவில்லை, என் மேலதிகாரிகள் என்ன சொல்றாங்களோ அதன்படி தான் எப்போதும் செய்வேன். இதற்கு மேல் என்னிடம் சொல்ல  வார்த்தை எதுவும் இல்லை என்றுக்கூறி தொடர்பை துண்டித்தார்.” காட்டமாக!

மேலும் சூப்ரண்ட் ருக்மணி ப்ரியாவிடம் பேசியபோது, “தனக்கு மேல் உள்ள உயரதிகாரிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பது காக்கி சட்டை போட்ட எல்லாருக்கும் கண்டிப்பா தெரியும். ஆனா அவங்க தெரிஞ்சும் மரியாதை செலுத்தவில்லை. இதுதொடர்பாக டிஐஜியும் விசாரித்து மன்னிப்பு கேட்க வைத்தார். அதனால் டிரான்ஸ்பரும் போட்டாச்சு என்றவரிடம், மேலும் சம்பந்தப்பட்ட பெண் துணை ஜெயிலர் மரியாதை செலுத்தாததுக்கு காரணம், ஏற்கனவே ஆண்கள் சிறையில் உங்களை பற்றிய எழுந்த புகாருக்கு, அவர் உங்களுக்கு எதிராகவே மேலதிகாரிக்கு ரிப்போர்ட் கொடுத்தாராமே என்று கேள்வி எழுப்பியதற்கு.. அவர் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. ஏதோ கதை கட்டுராங்க” என்றார்.

கண்ணால் பார்க்காதையும், காதால் கேட்பதையும் வைத்து தண்டனை கொடுக்கும் அதிகாரிகள் சற்று தீர விசாரித்தாலே உண்மை விளங்கிவிடும்.!

– ஜான் கென்னடி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.