குப்பையில் மின்சாரம்! பள்ளி மாணவனுக்கு பாராட்டு!
கரூர் மாவட்டம் பள்ளபட்டி பகுதியை சேர்ந்த சிறுவன் கே.எ.முஹம்மது ருஃபியான் என்பவர் பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளியில் படித்து கொண்டு இருக்கும் போது 1.குப்பையில் இருந்து மின்சாரம் தயாரித்தல் 2.தீப்பிடித்தால் தானாக தீயணைக்கும் கருவி 3.தலைக்கவசம் அணிந்தால் மட்டும் இருசக்கர வாகனங்களை இயக்கும் கருவி 4.இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் மூலம் அதிகமான வெளிச்சத்தை LDR SENSOR மூலம் தானாக குறைக்கும் கருவி 5.மழைக்காலங்களில் குடையில் இருந்து மின்சாரம் தயாரித்து LED லைட் எரிய செய்யும் கருவி 6.நான்கு சக்கர வாகனகள் சாலையில் செல்லும் போது தீப்பற்றி கொண்டால் தானாக தீயணைக்கும் கருவி, உள்ளிட்ட பல அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளுக்காக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் 40 விருதுகளும் 18 மெடல்களும் மற்றும் 26 சான்றிதழ்களும் வாங்கியுள்ளார்.
கரூர் மாவட்ட காவல் காண்காணிப்பாளர் அவர்களிடம் (25.08.2025) நேரில் சந்தித்து தனது கண்டுபிடிப்புகளை விவரித்தார் அவரை கரூர் மாவட்ட காவல் காண்காணிப்பாளர் பாராட்டி பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்து மென்மேலும் ஊக்கப்படுத்தினார்.