இளம் சாதனையாளர்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. 2024-25ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட  உள்ளது.

இத்திட்டத்திற்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 லட்சம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2024.

கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரி பார்க்க கடைசி நாள்: 15.11.2024.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

புதுப்பித்தல்:

இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National scholarship portal) Renewal application என்ற இணைப்பில் (Link) சென்று OTR Number (One Time Registration) பதிவு செய்து 2024-25 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பித்தினை புதுப்பித்தல் (Renewal)  மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

புதியது :

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவியர்கள், முறையே 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித்தொகையானதுவழங்கப்படும்.

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம்
பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம்

எனவே 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் தங்களது கைபேசி எண் (Mobile number) மற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்தால் OTR Number & Password பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு வரப்பெறும்.

மேற்படி OTR Number பயன்படுத்தி 2024-25ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித் தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து புதியது (Fresh Application) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட National Scholorship Portal (https://scholorships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (http://socialjustice.gov.in) அணுகி கல்வி உதவித்தொகை பயன்களை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

எனவே இத்திட்டம் தொடர்பாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து தகுதி வாய்ந்த மாணவஃமாணவியர்கள் உரிய காலத்திற்க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

Saravana Multispeciality Hospital Pvt. Ltd., Madurai,

Leave A Reply

Your email address will not be published.