உச்சக்கட்ட குமுறலில் சிறைக்காவலர்கள் !
சென்னையைச் சேர்ந்த சிறைக்காவலர் லெனினின், அகால மரணம் சிறைக்காவலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அவரது மனைவி அரசு ஸ்டேன்லி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும் நிலையில், இரு குழந்தைகள் புழல் பகுதியில் இயங்கும் பள்ளியில் படித்து வரும் நிலையில், அதிரடியாக குழித்துறை கிளைச்சிறைக்கு தூக்கியடிக்கப்பட்டார்.

நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில், மனைவி ஒரு பக்கம் பிள்ளைகள் ஒரு பக்கம் தாங்கள் ஒரு பக்கம் என்பதாக தமிழகம் முழுவதும் சிறைக்காவலர்கள் ஆளுக்கொரு திசையாக தூக்கியடிக்கப்பட்டார்கள். இந்த பின்புலத்தில்தான், தனது மனைவி பிள்ளைகளை பார்த்துவிட்டு, சென்னையிலிருந்து பணியிடமான குழித்துறைக்கு பயணித்த ஆம்னி பேருந்து விபத்துக்குள்ளாகி மரணமடைந்திருக்கிறார் காவலர் லெனின்.
நல்ல சம்பளத்தில் கௌரவமாக வாழ்வதற்கான வாய்ப்பு இருந்தும், ஆசையாய் வாழ வேண்டிய வயதில், அதுவும் இவ்வளவு இளம் வயதில், இரு குழந்தைகளை தவிக்கவிட்டு, மனைவியை இளம் விதவையாக்கிவிட்டு குடும்பத்தை நிற்கதியில் ஆழ்த்திவிட்டுச் சென்ற, காவலர் லெனினின் மரணம் எத்துனை துயரமானது?
இவரைப்போல, இன்னும் பல நூற்றுக்கணக்கான காவலர்கள், இத்தகைய இடமாற்ற “தண்டனை”யோடுதான், இன்றும் உழன்று வருகின்றார்கள் என்பது, எத்துனை அவலம்?
— ஆதிரன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.