மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்:
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள வேலைநாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு. திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 24.01.2026 (சனிக்கிழமை) அன்று திருச்சிராப்பள்ளி, பிஷப் ஹீபர் கல்லூரியில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இம்முகாமில் தொழில்துறை,சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு தனியார் துறைகளைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும், இம்மாவட்டத்திலுள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.
இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 10ஆம் வகுப்பு. பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ. டிப்ளமோ, செவிலியர், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகள் போன்ற கல்வித்தகுதிகளையுடைய 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுய விவரக்குறிப்பு (Bio-data), அனைத்து கல்விச்சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் வேலைநாடுநர்கள், தமிழ்நாடு அரசின் https://www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்தும் பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன்,இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.