சென்னையில் ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், பேராசிரியர் சுப.வீ. பங்கேற்பு

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அண்மைக் காலமாக ஒன்றியக் கல்வி அமைச்சர் இந்தியைப் பாடமாகக் கொண்டுள்ள பிரைம்ஸ்ரீ பள்ளிகளைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் 2ஆயிரம் கோடி கல்வி நிதியை ஒதுக்கமுடியாது என்று நாடாளுமன்ற மக்களவையில் வெளிப்படையாகவே அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான சூழ்நிலை உருவானது.

இந்நிலையில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பைக் கண்டித்து பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் தலைமையில் தமிழகம் தழுவிய தமிழமைப்புகளின்  சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  10-03-2025 திங்கள் காலை  10.00 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இனிய ரமலான் வாழ்த்துகள்

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்

தமிழ்மாமணி வா.முசே. திருவள்ளுவர் வரவேற்புரை நிகழ்த்தினார். திராவிட இயக்கத் தமிழ்ப்பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன் தொடங்கி வைத்தார். பன்னாட்டுத்தமிழுறவு மன்றத் தலைவர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைக் கண்டித்து சிறப்புரையாற்றினார். அப்போது,“1938ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இந்தி மொழியைத் திணிக்க முற்பட்டபோது முதல் மொழிப்போர் தந்தை பெரியார் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அறிஞர் பெருமக்கள் தலைமையில் நடைபெற்றது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

திருச்சியில் அறிவுசார் நூலகம்

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

1965ஆம் ஆண்டு 2ஆவது மொழிப்போர் அண்ணா தலைமையில் மாணவர்கள் இந்தியை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டது. அதில் சிலர் தங்களின் உயிர்களை ஈகம் செய்தார்கள். தற்போது 3ஆவது மொழிப்போருக்குக்கான தேவை ஏற்பட்டுள்ளது. தாய்மொழியாம் தமிழ்மொழி காக்க இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழர்கள் அனைவரும் களம் காண்போம்” என்று உணர்ச்சிப் பொங்க உரையாற்றினார்.

இந்தித் திணிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
இந்தித் திணிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

இந்நிகழ்வில்  மேனாள் ச.ம.உ. கே.டி.கலையரசன், வழக்கறிஞர் சிவகுமார், திருச்சி புலவர் பழ.தமிழாளன், முனைவர் தமிழியலன், பாவலர் கண்மதியன், பாவலர்மறத்தமிழன், பாவலர் நந்தன், பாவலர்பாக்கம் தமிழரசன் ஆகியோர் ஒன்றிய அரசின் இந்தித் திணிப்புக்குக்  கண்டனம் தெரிவித்து உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வில் தமிழ்ப் புலமையர்களும் தமிழ்ப்பற்றார்களும் பெருந்திரளாக நூறு பேர்களுக்குமேல் கலந்துகொண்டனர். ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பிற்கும் தமிழ்மொழியின் மீது நஞ்சுமிழும் ஒன்றிய அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்கள்  எழுப்பப்பட்டன.

 

— அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.