அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தனியார் நிதி (சோழமண்டலம்) நிறுவனத்திற்கு பூட்டு போட்டு போராட்டம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க

தேனி மாவட்டம் கம்பத்தில் தனியார் நிதி (சோழமண்டலம்) நிறுவனம் கடன் பெற்று பாதிக்கப்பட்டவர் நிறுவனத்தின் கிளைக்கு பூட்டு போட்டு போராட்டம்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, கம்பம் காந்தி சிலை அருகே  சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் பைனான்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் அமைந்துள்ளது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இந்த நிறுவனத்தில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த முருகன் என்பவர் தனது தேவைக்காக பறிமுதல் செய்யப்பட்ட 407  மினி லாரி  ஒன்றை ஆறு லட்சத்தி 5000 ரூபாய் விலை பேசி வாங்கியுள்ளார்.

கடந்த 2024 ஏழாவது மாதம் பணத்தைக் கட்டி லாரியை பெற்றுள்ளார். பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து இந்த மினி லாரிகாண ஆவணங்கள் நிறுவனத்திடம் இருந்து வாங்கிச் சென்றுள்ளார்.

https://www.livyashree.com/

ஆனால் அதற்குரிய என்ஓசி என்ற தடையில்லா சான்று நிறுவனத்தால் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக தொடர்ச்சியாக கடந்த ஒரு வருடம் ஆகவே இந்த என்ஓசி சான்றிதழை பெறுவதற்காக மாதந்தோறும் திருநெல்வேலியில் இருந்து கம்பத்திற்கு வந்து தொடர்ச்சியாக கேட்டுள்ளார்.

பூட்டு போட்டு போராட்டம்
பூட்டு போட்டு போராட்டம்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஆனால் தற்போது வரை அந்த சான்றிதழ் வழங்காமல் நிறுவனத்தினர் அலைக்கழிப்பு செய்து வந்துள்ளனர். இதனால் கோபமடைந்த முருகன்  கம்பத்திற்கு வந்து சோழமண்டலம் நிறுவனத்தின் கம்பம் கிளையை பூட்டு போட்டு பூட்டினார்.

அவருடன் ஏற்கனவே இந்த வண்டியை வைத்திருந்த கம்பத்தைச் சார்ந்த ராம்குமாரும் உடன் வந்திருந்தார். ராம்குமார் இடமிருந்து இந்த வண்டியை எடுத்துச் சென்றதற்கான சீசிங் லெட்டர் மற்றும் என் ஓ சி சான்றிதழ் வழங்காமல் இருந்துள்ளனர்.

இதனால் அவரும் கோபமடைந்து முருகனுடன் சேர்ந்து அந்த நிறுவனத்தை பூட்டினர். இதனால் பணியாளர்கள் அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் வெளியேவே நின்றனர். இதனை அடுத்து நிறுவனத்தின்  உயர் அலுவலர்கள் வந்து பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் கம்பம் தெற்கு காவல் நிலையத்தை சார்ந்த காவலர்களும் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேரத்திற்கு பின்னர் அலுவலகத்தை திறந்து விடுமாறும் இச்சம்பவம் குறித்து நிறுவனத்தின் உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர். இதனை அடுத்து பூட்டப்பட்டிருந்த பூட்டு திறக்கப்பட்டது.

இது குறித்து முருகன்  கூறுகையில் ஒரு வருட காலமாக என் ஓ சி சான்றிதழ் கிடைக்காததால் வண்டியை  இயக்க முடியவில்லை. இதன் காரணமாக பெருத்த மன உளைச்சல் ஏற்பட்டும் பண இழப்பும்  ஏற்பட்டதாக கூறுகிறார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். அதேபோன்று ராம்குமார் கூறுகையில் என்.ஒ.சி சான்றிதழ் கிடைக்கப்பெறாததால் தனது வங்கிக் கணக்கிற்கு சிபில் ஸ்கோர் கிடைக்கவில்லை,

இதனால் தான் கடன் பெற முடியவில்லை என்றும் தொடர்ந்து வங்கி கணக்கில் இருந்து பணத்தினை நிதி நிறுவனத்தினர் எடுப்பதால் தான் பாதிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். இச்சம்பவம் கம்பம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.

 

—   ஜெய்ஸ்ரீராம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.