24 மணி நேர துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளிக்க அனுமதிக்ககோரி ஆர்ப்பாட்டம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மதுரையில் கிரானைட் முறைகேடுகள் குறித்த விசாரணை ஆணைய தலைவராக பணியாற்றிய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளிக்கக்கூடிய போலீசாரை அனுமதிக்ககோரி சுரங்கத்திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

சுரங்க திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு மற்றும் பொதுநல அமைப்புகள் இணைந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாவட்டத்தில் 1 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கிரானைட் ஊழல் நடைபெற்று உள்ளது, ஊழல் குறித்து அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

சுரங்கத்திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

இதனையடுத்து 200க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. சகாயத்தின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் கிரானைட் முறைகள் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தமிழகத்தில் கனிமவள முறைகேடுகள் குறித்து புகார் கொடுப்பவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு பாதுகாப்பு விலகிக் கொண்டது மிகப்பெரிய அநீதியாகும்

சுரங்கத்திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்சட்டவிரோத கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரணை செய்த சகாயத்திற்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிப்பது தமிழக அரசின் தார்மீக கடமையாகும்

ஆகவே ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு வாழ்நாள் முழுவதும் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளித்து அவரின் உயிருக்கும் உடைமைக்கும் எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாத வண்ணம் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுரங்க திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு மற்றும் பொதுநல அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

—    ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.