அடிப்படை வசதியில் அலட்சியம் ! பொதுமக்கள் கோரிக்கை !
மதுரை செல்லூர் பந்தல்குடி பகுதியில் முதலமைச்சர் நேரில் சென்று பார்த்த பின்னும் கூட இன்று வரை ஆபத்தான முறையில் உள்ள பந்தல்குடி கால்வாய் கரையில் உள்ள பொதுக் கழிப்பிடம், குடிநீர் குழாய்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதில் பெரும் சிரமங்கள் உள்ளது.
அவற்றை சீரமைத்து தர வேண்டியும் அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சரவணனை அப்பகுதி பொதுமக்கள் சந்தித்து முறையிட்டதை தொடர்ந்து அப்பகுதிக்கு சென்று பொதுக் கழிப்பிடம், குழாய்கள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு கழிப்பிடத்தை சீர் செய்து முன்புறம் மறைப்புச் சுவர் கட்டுதல், குழாயடிகளில் தளம் அமைத்தல், குழாய்களை சுற்றி சிறு சுவர் கட்டுதல் ஆகியவற்றை தனது சொந்தச் செலவில் அமைத்து தருவதாகவும் பொது மக்களுக்கு உறுதி வழங்கினார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்