டீசல் கேனுடன் கலெக்டர் ஆபிசுக்கு வந்த நபர் ! சாமர்த்தியமாக செயல்பட்ட பத்திரிகையாளர்கள் !
மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை
மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரின் 45 செண்ட் நிலத்தை மற்றொரு நபருக்கு, வாடிப்பட்டி வட்டாட்சியர் துணையுடன் 45 சென்ட் நிலம் மற்றொரு நபருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பல இடங்களில் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் டீசலை தன் உடலில் ஊற்றிக் கொள்ளப் போவதாக தெரிவித்ததை அடுத்து செய்தியாளர்கள் சாமர்த்தியமாக டீசல் கேனை அவரிடம் இருந்து பறிமுதல் செய்து அசம்பாவிதத்தை தவிர்த்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்கள் காவல்துறைக்கு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பாண்டியை தல்லாகுளம் காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று மனு குறைதீர்க்கும் நாளில் காவல்துறையின் பாதுகாப்பை மீறி டீசல் கேனுடன் வந்த விவசாயியால் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு பதட்டமும் நிலவியது.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.