உணவுப்பொருள் வழங்கல் தொடர்பான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் !
பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைகளைக்கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், உணவுப்பொருள் வழங்கல் தொடர்பான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாதந்தோறும் நடத்த உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வருகின்ற 19.10.2024 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை கீழ்கண்ட வட்டங்களில் அதன் எதிரே குறிப்பிடப்பட்டுள்ள நியாய விலை அங்காடிகளில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம், தனி வட்டாட்சியர்கள் / வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்பட உள்ளது. இதற்கு ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு கண்காணிப்பு அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:
வ.
எண்
|
வட்டத்தின் பெயர்
|
குறைதீர் நாள்
கூட்டம் நடைபெறும் இடம்
|
நியாய விலை கடை
மற்றும் குறியீடு எண்
|
கண்காணிப்பு அலுவலர்
|
|
1 | திருச்சிராப்பள்ளி
கிழக்கு
|
நியாயவிலைக்கடை
வளாகம்
|
பாபுரோடு-2
|
துணைப்பதிவாளர், பொது
விநியோகத்திட்டம், திருச்சிராப்பள்ளி
|
|
2 | திருச்சிராப்பள்ளி
மேற்கு
|
நியாயவிலைக்கடை
வளாகம்
|
டாக்கர்ரோடு தாமரரூபவயம்
|
வருவாய் கோட்டாட்சியர்,
திருச்சிராப்பள்ளி.
|
|
3 | திருவெறும்பூர் | நியாயவிலைக்கடை
வளாகம்
|
எல்லைக்குடி
|
தனித்துணை ஆட்சியர்
சமூக பாதுகாப்புத் திட்டம்.
|
|
4 | ஸ்ரீரங்கம் | நியாயவிலைக்கடை
வளாகம்
|
குழுமணி
|
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்
மற்றும் சிறுபான்மையினர்நல அலுவலர், திருச்சிராப்பள்ளி
|
|
5 | மணப்பாறை | நியாயவிலைக்கடை
வளாகம்
|
பெருமாம்பட்டி
|
வருவாய் கோட்டாட்சியர்,
ஸ்ரீரங்கம்.
|
|
6 | மருங்காபுரி | நியாயவிலைக்கடை
வளாகம்
|
பாப்பாப்பட்டி
|
மாவட்ட ஆட்சித்தலைவரின்
நேர்முக உதவியாளர் (தேர்தல்), திருச்சிராப்பள்ளி.
|
|
7 | இலால்குடி | நியாயவிலைக்கடை
வளாகம்
|
சிறு மருதூர்
|
வருவாய் கோட்டாட்சியர்,
இலால்குடி
|
|
8 | மண்ணச்சநல்லூர் | நியாயவிலைக்கடை
வளாகம்
|
டோல்கேட்
|
மாவட்ட ஆய்வுக்குழு
அலுவலர், திருச்சிராப்பள்ளி.
|
|
9 | முசிறி | நியாயவிலைக்கடை
வளாகம்
|
தேவானூர் புதூர்
|
வருவாய் கோட்டாட்சியர்,
முசிறி.
|
|
10 | துறையூர் | நியாயவிலைக்கடை
வளாகம்
|
மதுராபுரி-2
|
உதவி ஆணையர், கலால்
திருச்சிராப்பள்ளி
|
|
11 | தொட்டியம் | நியாயவிலைக்கடை
வளாகம்
|
மேய்க்கல்நாயக்கன்பட்டி
|
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், திருச்சிராப்பள்ளி
|
எனவே, பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம் தொடர்பான கோரிக்கைகளான குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர கோரிக்கைகளை மேற்காணும் கூட்டங்களில் கலந்து கொண்டு தெரிவித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.