எஸ்பிஐ வழங்கிய தகவல்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கிய பத்திரிகையாளர் !
அவர் ஏப்ரல் -2018 இல் வாங்கிய பத்திரங்களின் இரசீதை வைத்திருக்கிறார். ஆனால் எஸ்பிஐ வெளியிட்டுள்ள தகவலில் அவர் 2020 அக்டோபரில் வாங்கியதாகத் தவறான தகவல்களை ...
தேர்தல் பத்திரங்கள் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டில் The Quint இதழில் புலனாய்வு ஊடகவியலாளராகப் பணியாற்றிய பூனம் அகர்வால் தேர்தல் பத்திரங்கள் பின்னணியில் உள்ள செயல்பாடுகளைப் பற்றிய உண்மையைக் கண்டறிய அவரே தில்லி எஸ்பிஐ கிளைக்கு விரைந்து 2018 ஏப்ரல் அன்று 1000 ரூ மதிப்புடைய இரண்டு பத்திரங்களை வாங்கியுள்ளார். அப்போது பின்னபற்றப்பட்ட நடைமுறைகள் குறித்தும் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை எஸ்பிஐ வழங்க காலந்தாழ்த்திய போதும் அந்தத் தகவல்களை எளிதாகப் பெற முடியும் என்பதையும் The Wire.in இல் தெரிவித்திருக்கிறார்.
தற்போது அவர் ஏப்ரல் -2018 இல் வாங்கிய பத்திரங்களின் இரசீதை வைத்திருக்கிறார். ஆனால் எஸ்பிஐ வெளியிட்டுள்ள தகவலில் அவர் 2020 அக்டோபரில் வாங்கியதாகத் தவறான தகவல்களைத் தேர்தல் ஆணையத்திற்கும் உச்சநீதிமன்றத்திற்கு வழங்கிய உறுதிமொழிப் பத்திரத்திலும் தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ வழங்கிய தகவல்களின் நம்பகத்தன்மையை இது கேள்விக்குள்ளாக்குவதோடு பெருமுதலாளிகளையும் , மோடியையும் காப்பதற்கு எஸ்பிஐ சட்டப் பகை செயலில் இறங்கியுள்ளதையும் வெளிப்படுத்துகிறது.
தேர்தல் பத்திரங்கள் ஒரு முடிவில்லாத ஊழலின் ஊற்றுக்கண்ணாக மட்டுமில்லை நம்முடைய சனநாயகத்தை அழிப்பதற்கு ஒன்றியத்தின் நிதித்துறை மற்றும் புலானாய்வு அமைப்புகள் உடன்பட்டு பணியாற்றியிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுள்ளது.
அமைச்சர் பிடிஆர் குறிப்பிடுவது போல எஸ்பிஐ மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
முகநூலில்: குமரன்