சமையல் குறிப்பு: குயிக் ஒயிட் சாஸ் பாஸ்தா!
குழந்தைங்க ரொம்ப விரும்பி சாப்பிடும் ஒயிட் சாஸ் பாஸ்தா
வணக்கம், சமையலறை தோழிகளே! இன்னைக்கு நாம்ப பாக்க போற ரெசிபி இதோ சட்டுனு செய்ற மாதிரி சிம்பிள் ஒயிட் சாஸ் பாஸ்தா. வழக்கமா செய்ற மாதிரி நூடுல்ஸ் சேமியானு செய்து தராமல் புதுசா ஒருமுறை இதை ட்ரை பண்ணி பாருங்க உங்க குழந்தைங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க, சரி வாங்க நம்ம குட்டீஸ்காக எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:-
பாஸ்தா ஒரு கப், வெண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கோதுமை அல்லது மைதா 2 டேபிள் ஸ்பூன், பூண்டு 5 பல் பொடிதாக நறுக்கியது, பால் காய்ச்சியது 500 மிலி, சீஸ் துருவியது 4 டேபிள் ஸ்பூன், இத்தாலியன் சீசனிங் 1 டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு, மிளகுத்தூள் தேவையான அளவு, தண்ணீர் தேவையான அளவு.
செய்முறை:-
ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்ததும் சிறிது உப்பு மற்றும் பாஸ்தாவை (எந்த டிசைன் பாஸ்தாவாக இருந்தாலும் சரி) சேர்த்து 9 முதல் 10 நிமிடம் வரை கொதிக்க விடவும். பாஸ்தா வெந்தவுடன் அதனை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். மீண்டும் அதே கடாயில் மூன்று ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து அதில் பொடியாக நறுக்கிய பூண்டு மைதா அல்லது கோதுமை மாவு சேர்த்து கிளறிய பின் காய்ச்சிய பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும். பால் கொதி வந்தவுடன் அதில் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள், துருவிய சீஸ் சேர்த்து கிளறவும். அதன் பின் வேகவைத்த பாஸ்தாவை சேர்த்து கார்னிஷிங்காக இத்தாலியன் சீசனிங்கை சேர்த்து கிளறி இறக்கவும். இப்போது சூடான குயிக் ஒயிட் பாஸ்தா சுவைக்க தயார். உங்கள் குழந்தைகளுக்கு சூடாக பரிமாறுங்கள்.
— பா. பத்மாவதி
Comments are closed, but trackbacks and pingbacks are open.