அயோத்தி ராமர் கோவில் ! – ஆன்மீகப் பயணம் 8
ராமர் கோவில் இந்து சமயத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவின் அவதாரமான குழந்தை ராமர் அயோத்தியில் பிறந்த இடமாக கருதப்படும் ராமஜென்ம பூமியில் கட்டப்பட்ட ஒரு இந்து கோவிலாகும். இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தி மாவட்டத்தில் உள்ள அயோத்தி நகரில் அமைந்துள்ளது.
அயோத்தி இந்துக்களின் மிகவும் புனிதமான நகரங்களில் ஒன்றாகும். பொ.ஊ 1528 ஆம் ஆண்டில் முகலாய பேரரசர் பாபரின் ஆணைப்படி ராமர் பிறந்த இடம் என்று கூறப்படும் ராமஜென்ம பூமியின் தலத்தில் இருந்த குழந்தை ராமர் கோவில் இடிக்கப்பட்டு பாபர் மசூதி கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
ராமஜென்ம பூமி தொடர்பான 1850 இல் சர்ச்சை எழுந்தது மற்றும் 1980 களில் சங்க பரிவாரை சேர்ந்த விசுவ இந்து பரிஷத் அமைப்பின் இந்துக்களுக்காக ராமஜென்ம பூமியை மீட்டெடுக்கவும் குழந்தை ராமருக்கு ராம் லல்லா கோவிலை கட்டவும் ஒரு புதிய இயக்கத்தை தொடங்கியது.
9 நவம்பர் 1989 இல் சர்ச்சைக்குரிய மசூதியை ஒட்டிய நிலத்தில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியது. 6 டிசம்பர் 1992 அன்று விசுவ இந்து பரிசத் மற்றும் பாரத ஜனதா கட்சி ஏற்பாடு செய்த கர சேவர்கள் என்றழைக்கப்பட்ட ஏறத்தாழ ஒன்றரை லட்சம் தன்னார்வாளர்களை உள்ளடக்கிய ஒரு பேரணி பாபர் மசூதியை இடித்தது.
இந்திய தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சிகளில், பாபர் மசூதி இருந்த இடத்தில் இந்து கோயில் இருந்ததாக ஆதாரம் கிடைத்தது. பல ஆண்டுகளாக குறிப்பிட்ட பகுதியை கையகப்படுத்துதல் தொடர்பான பல்வேறு உரிமை மற்றும் சட்டம் மோதல்களும் நடந்தன.

2010ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாக பிரிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அதில், ராமர் கோவில் கட்டுவதற்காக இந்து மகா சபாவிற்கு ஒரு பங்கு, மசூதி அமைப்பதற்காக இஸ்லாமிய விக்ஃப் விரியத்துக்கு ஒரு பகுதி மற்றும் இந்து மதப் பிரிவினர் நிர்மோகி அகராவிற்கு ஒரு பங்கு என்று கூறியது. இதை, எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
2019 ஆம் ஆண்டு அயோத்தி பிரச்சனை இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பிறகு தான் சர்ச்சைக்குரிய நிலமானது. இந்திய அரசால் நிறுவப்பட்ட ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த சாத்திர அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டது. இஸ்லாமிய விக்ஃப் வாரியத்துக்கு புதிய மசூதி கட்டுவதற்கு அயோத்தியில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தண்ணிப் ஊர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.
5 பிப்ரவரி 2020இல் அயோத்தி ராமர் கோயிலை கட்டும் திட்டத்தை நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஏற்றுக் கொண்டதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. பகவான் விஷ்ணுவின் அவதாரமான ராமரின் குழந்தை வடிவமான ராம் லல்லா கோயிலின் மூலவர் ஆவர். இக்கோயில் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளை சார்பாக லார்சன் அண்ட் ருப்ரோ நிறுவனத்தால் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. கோயில் வளாகத்தின் நடுவில் குழந்தை ராமர் வீற்றிருக்கும் கருவறை மற்றும் அதை சுற்றி சூரியன், விநாயகர், சிவன், துர்க்கை, அன்னபூரணி மற்றும் அனுமன் ஆகிய தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறிய சன்னதிகள் இருக்கும்.
இக்கோயில், கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா 5 ஆகஸ்ட் 2020 அன்று நரேந்திர மோடி பங்கு பெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடைபெற்றது. மேலும், 22 ஜனவரி 2024 அன்று பிராண பிரதிஷ்டை கும்பாபிஷேகம் செய்து ஸ்ரீராமர் கோவில் சிறப்பாக திறக்கப்பட்டது. அயோத்தி ராமர் கோவில் சிறப்புகள் பலவற்றை இந்தக் கோவில் பிரம்மாண்டமான கட்டிடங்களையும், நவீன கட்டுமான நுட்பங்களையும் கொண்டுள்ளது.
மேலும், குழந்தை ராமரின் சிலை முக்கிய கருவறையில் நிறுவப்பட்டு உள்ளது. இந்தக் கோவில் உலகெங்கிலும் உள்ள பக்தர்களை ஈர்க்கும் ஒரு அடையாளமாக உள்ளது. இங்கு பாரம்பரிய கலைப்பாணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது, இந்தியாவின் மிக முக்கியமான கட்டிடக்கலை சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
— பா. பத்மாவதி.
Comments are closed, but trackbacks and pingbacks are open.