ராமேஸ்வரம் ரயில் நிலையமறுசீரமைப்பு பணிகள் தீவிரம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ராமேஸ்வரம் ரயில் நிலையமறுசீரமைப்பு பணிகள்தீவிரம்

 

ராமேஸ்வரம் ரயில் நிலையம் மதுரை ராமேஸ்வரம் ரயில்வே பிரிவில் உள்ள ஒரு முக்கியமான ரயில் நிலைய முனையம் ஆகும்இந்த ரயில் நிலையம் புறநகர் இல்லா ரயில் நிலையப் பிரிவுகளில் மூன்றாம் நிலையில் வருகிறதுஇந்த ரயில் நிலையத்தை தினந்தோறும் சராசரியாக 9,000 பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

Srirangam MLA palaniyandi birthday

பாம்பன் தீவில் உள்ள இந்த ரயில் நிலையம் இலங்கை மன்னார் தீவில் இருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளதுமறு சீரமைப்பு பணிக்கான ஒப்பந்த ஆணை 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 அன்றே ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. ரூ 90.20 கோடி செலவில் 18 மாதங்களுக்குள் கட்டுமான பணிகளை நிறைவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் ரயில் நிலையமறுசீரமைப்பு பணிகள்தீவிரம்
ராமேஸ்வரம் ரயில் நிலையமறுசீரமைப்பு பணிகள்தீவிரம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

கட்டுமான பணிகளை மேற்பார்வையிட மும்பையைச் சேர்ந்த தனியார் திட்ட மேலாண்மை நிறுவனம் பணி அமர்த்தப்பட்டுள்ளதுநிலப்பரப்பு கணக்கெடுப்பு, மண் மாதிரி பரிசோதனை, மரங்கள் கணக்கெடுப்பு, அசையும், அசையா சொத்துக்கள் கணக்கெடுப்பு, பருந்து பார்வை ட்ரோன் ஆய்வு ஆகிய பணிகள் முடிவடைந்துள்ளன.

கட்டுமான பணியிடங்களில் உள்ள பொருட்கள் அகற்றப்பட்டுஒப்பந்ததாரர் அலுவலக கட்டிடப் பணி நிறைவு பெற உள்ளதுசிமெண்ட் கலவையை கடத்தும் கன்வெயர் தடம் அமைக்கப்பட்டுள்ள11 இடங்களில் பணிகளை துவக்க ஏதுவான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதுரயில் நிலையத்தின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் தலா ஒரு ரயில் நிலைய கட்டிடம் உருவாக இருக்கிறது ராமேஸ்வரம் கோவில் கோபுர அமைப்புடன் நவீன கட்டிடக்கலை அம்சத்துடன் ரயில் நிலைய கட்டிடம் அமைய இருக்கிறது கிழக்குப் பகுதியில் 7158 சதுர மீட்டர் பரப்பில் இரு மாடி கட்டிடம் அமைய இருக்கிறது.

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

ராமேஸ்வரம் ரயில் நிலையமறுசீரமைப்பு பணிகள்தீவிரம்
ராமேஸ்வரம் ரயில் நிலையமறுசீரமைப்பு பணிகள்தீவிரம்

இந்த கட்டிடத்தில் வருங்கால தேவைகளை கருத்தில் கொண்டு மேலும் நாலு மாடிகள் கட்டும் வகையில் அடித்தளம் அமைக்கப்படுகிறது இந்த கட்டிடத்தில் இருந்து நடைமேடை எண்  1, 2, 3 ஆகியவற்றிற்கு நேரடியாக செல்லும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. நான்காவது நடைமேடைக்குசெல்வதற்கு மட்டும் அமையப் போகும் புதிய நடை மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டி இருக்கும்.

இருந்தாலும் கிழக்கு பகுதி கட்டிடத்தின் திறந்த வெளி வர்த்தக பயன்பாட்டு மாடி பகுதியில் இருந்து நேரடியாக  நடைமேடை எண் 4 மற்றும் புதியதாக அமைய இருக்கும் நடைமேடை எண் ஐந்திற்கும் செல்லும்வசதியும் அமைய இருக்கிறது முன்புறத்தில் தனியாக பாதசாரிகளுக்கான பாதை அமைய இருக்கிறதுஇந்த கட்டிடத்தில் பயணிகளின் வசதிக்காக 2 எஸ்கலேட்டர்கள்4 மின் தூக்கிகள் அமைக்கப்பட உள்ளனரயில் நிலையத்திற்கு கூட்ட நெரிசல் ஏற்படாமல் வருகை மற்றும் புறப்பாடு பயணிகளுக்கு தனித்தனியாக பாதைகள் அமைக்கப்பட உள்ளனஇந்த கட்டிடத்தில் பயணச்சீட்டு பதிவு மையங்கள், காத்திருப்பு அரங்கு, கழிப்பறைகள், ரயில்வே சேவை அலுவலகங்கள், உணவகங்கள் மற்றும் வர்த்தக மையங்கள் அமைய உள்ளன.

ராமேஸ்வரம் ரயில் நிலையமறுசீரமைப்பு பணிகள்தீவிரம்
ராமேஸ்வரம் ரயில் நிலையமறுசீரமைப்பு பணிகள்தீவிரம்

வாகனங்கள் வந்து செல்ல தனிப்பகுதியும், இருபுறமும் தூண்களுடன் பாதசாரிகள் நடந்து செல்ல ராமேஸ்வரம் கோவில் பிரகார அமைப்பில் நடைபாதை அமைய இருக்கிறது நடைமேடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க முன் பகுதியில் குழுவாக சுற்றுலா வரும் பயணிகள் காத்திருப்பு வசதி ஏற்படுத்தப்பட உள்ளதுவடக்குப் பகுதியில் அமைய இருக்கும் ஒரு மாடி கட்டிடத்தில் ரயில்வே நிர்வாக அலுவலகங்கள் அமைய இருக்கின்றன.

தற்போதைய நடைமேடைகள் புதுப்பிக்கப்பட்டு நவீனமயமாக இருக்கின்றன மேலும் வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதியுடன் கூடிய காப்பகங்கள்,  ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம், ஓய்வு அறைகளுடன் கூடிய உபரயில்நிலையை கட்டிடங்கள்,  ரயில்வே ஊழியர் குடியிருப்புகள், பயணிகள் பயன்பாட்டு பகுதியில் இடையூறு இல்லாமல் சென்று வரும் வகையில் பார்சல் அலுவலக கட்டிடம் ஆகியவை அமைய இருக்கின்றன.

– ஷாகுல்.
படங்கள்: ஆனந்த்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.