திருச்செந்தூர் கடல் அரிப்புக்கு இதுதான் காரணமா? வெளியான பகீர் தகவல் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மனிதத் தவறுகளால்தான், திருச்செந்தூரில் தொடர்ந்து கடல் அரிப்பு‌ ஏற்படுவதாகவும்; தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவையும் மீறி தொடர்ந்து கடற்கரையில் கட்டுமானங்களை எழுப்பி வருவதாகவும் குற்றஞ்சுமத்தியிருப்பதோடு; இயற்கையான பாதுகாப்பு அரண்களை எழுப்பி கடல் அரிப்புக்கு நிரந்தர தீர்வு காணுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர், தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வே.குணசீலன் மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இரா.சா.முகிலன் ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

அந்த அறிக்கையில்,

“கடல் அரிப்பு என்பது அலைகள் ,கடல் நீரோட்டம், காற்றின் திசை காரணமாக இயற்கையாக உலகம் முழுக்க கடற்கரை மண் அரித்து செல்லப்படும் இயற்கையான நிகழ்வு  ஒன்று தான் .

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் குணசீலன், சா.முகிலன்
சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் குணசீலன், சா.முகிலன்

பருவ நிலை மாறுபாடுகள் காரணமாக தற்போது உலகம் முழுக்க கடலரிப்பு அதிகமாக  நிகழ்ந்து வருகிறது. ஆனால் , தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் நடக்கும் கடல் அரிப்பு என்பது முழுக்க முழுக்க மனித தவறுகளால் நடக்கும் ஒன்று ஆகும்.

பொதுவாக திருச்செந்தூர் பகுதிகளில் காற்றின் திசைக்கேற்ப தெற்கிலிருந்து வடக்கு நோக்கி 8 மாதங்கள் கடல் நீரோட்டமும் , வடக்கில் இருந்து தெற்கு நோக்கி 4 மாதங்கள் கடல் நீரோட்டம் என மாறுபடும்.

இந்த சமயத்தில் கடல் அலைகள் தெற்கு பகுதியில் இருந்து வடக்கு பகுதியில் கடல் மண்ணை அரிக்கும். கடந்த சில ஆண்டுகளாக மனித தவறுகளால் கடலுக்குள் ஏற்படுத்தப்படும் கட்டுமானங்களால் ஒரு பக்கம் கடல் அரிப்பும் , மறுபக்கம் கடற்கரை மண் மேடு  ஆவதும் நம் பகுதியில் தொடர்கதை ஆகிவிட்டது.

குறிப்பாக உடன்குடி அனல் மின் நிலையத்துக்காக கல்லா மொழியில் 8 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஒரு நிலக்கரி இறங்கு தளம் கடந்த 2018ம் ஆண்டு முதல் அமைக்கபட்டு வருகிறது. இதனால் கடல் அரிப்பு ஆலந்தலை பகுதியில் அதிகமானது , அதே நேரம் மணப்பாடு பகுதியில் மண்மேடுகள் அதிகமாகி மீனவ மக்கள் தொழிலுக்கு இடையூறு விளைவித்து வருகிறது.

கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதி

கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதி

ஆலந்தலை கிராமம் கடல் அரிப்பால் பாதிக்க பட்டதை தொடர்ந்து மீனவ மக்கள் குரல் எழுப்ப ஆலந்தலையில் 2021ம் ஆண்டு வாக்கில் தூண்டில் பாலம் ஒன்று அமைக்கபட்டது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஆலந்தலையில் தூண்டில் பாலம் அமைக்கபட்ட பிறகு அமலி நகர் பகுதியில் கடல் அரிப்பு அதிகமானது. இதனை தொடர்ந்து அமலி நகர் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட தற்போது  அமலி நகர் பகுதியில் தூண்டில் பாலம் அமைக்க 70% பணிகள் முடிவடைந்து விட்டது.

இதனால் திருச்செந்தூர் கோவில் பகுதியில் தற்போது அளவுக்கு அதிகமான கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.

இனி திருச்செந்தூர் கோவிலுக்கு பாதிப்பு ஏற்படாமல் கடலில் தடுப்பு சுவரோ , தூண்டில் பாலமோ கட்டினால் அது வீரபாண்டியன் பட்டினம் கடற்கரையை பாதிக்கும் .

கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் கடல் அரிப்புக்கு தீர்வு  தொடர்பான ஒரு ஆணை வெளியிட்டது. அதன்படி கடல் அரிப்பை தடுக்க  கடலுக்குள் கடினமான கட்டுமானங்கள் , தடுப்பு சுவர் போன்றவை கட்ட கூடாது என்று உத்தரவிட்டது.

ஆனால் நடந்தது என்ன …. அமலி நகர் பகுதி கடல் அரிப்பால் பாதிக்க பட்டதால் அங்குள்ள மீனவ மக்கள் போராடியதை தொடர்ந்து தமிழக அரசு பசுமை தீர்ப்பாயத்தில் தடுப்பு சுவர் கட்டுமான பணிகள், தூண்டில் பாலம் அமைக்க தடை என்பதால் நாங்கள் தூண்டில் வளைவு அமைக்கிறோம் என்று திட்டத்தின் பெயரை மட்டும் சற்றுமாற்றி நூதனமாக அனுமதி பெற்று பணிகள் நடந்தது.

இதனால் தான் தற்போது திருச்செந்தூர் கோவில் கடற்கரை கடல் அரிப்பால் பாதிக்க பட்டு உள்ளது.

இனியும் கடல் அரிப்பால் திருச்செந்தூர் கடற்கரையை காக்க கடற்கரை மேலாண்மை சட்டங்களை பின்பற்றாமல் , தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் ஆணையை பின்பற்றாமல் கடினமான கட்டுமானங்களை நம் பகுதி கடலுக்குள்  மேற்கொண்டால் வீரபாண்டியன் பட்டினம் கடற்கரையோ , காயல்பட்டினம் கடற்கரையோ கொம்பு துறையோ , சிங்கி துறையோ , புன்ன காயல் கடற்கரையோ அடுத்த கடல் அரிப்பால் பாதிக்கப்படும் என்பது தான் உண்மை.

தமிழக அரசும் , தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் இனி நம் பகுதி கடற்கரையை கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்க கடலுக்குள் நிரந்தர கடின  கட்டுமானம் அமைப்பதை நிறுத்த வேண்டும் .

கடல் நீரோட்டம் , கடற்கரை வரைபடம் , கடல் அலைகள் இவற்றில் நிபுணத்துவம் கொண்ட நிபுணர்களின் உதவியுடன் சுற்றுசூழலுக்கு பாதிப்பு இல்லாமல் உள்ளூர் மக்களை கலந்தாலோசித்து இயற்கையான அரண்கள் அமைத்து கடல் அரிப்பை தடுக்க வேண்டும் என்பதே சுற்றுசூழல் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஏற்கனவே இது தொடர்பாக விரிவாக ( தூண்டில் வளைவு: ஒரு பக்கம் கடந்த அரிப்பு – மறுபக்கம் கடற்கரையில் மணல் மேடு உருவாவது தொடர்பாக தாது மணல் கொள்ளை நூலில் விரிவாக கூறியுள்ளோம்)

இயற்கையோடு இயைந்து வாழும் வகையில் அமைந்து உள்ள கடற்கரையில், அறிவியல் பூர்வமற்ற வகையில் கடின கட்டுமானங்களை ஏற்படுத்தாதே! கடலையும், கடற்கரையும் பாழ்படுக்காதே!!” என்பதாக அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

 

—  அங்குசம் செய்தி பிரிவு.

Saravana Multispeciality Hospital Pvt. Ltd., Madurai,

Leave A Reply

Your email address will not be published.