சமையல் குறிப்பு: இன்ஸ்டன்ட் வெங்காய சட்னி!
வணக்கம் சமையலறை தோழிகளே! இன்னைக்கு தோசை பணியாரம் இட்லி சப்பாத்தி இது எல்லாத்துக்கும் சூப்பரான பெஸ்ட் காம்பினேஷன் ஒரு இன்ஸ்டன்ட் வெங்காய சட்னி தான் எப்படி செய்யறதுன்னு பாக்க போறோம்.
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் 20, பூண்டு 10 பல், வர மிளகாய் 4, புளி ஒரு எலுமிச்சை அளவு, கொத்தமல்லி கருவேப்பிலை சிறிதளவு, உப்பு தேவையான அளவு, நல்லெண்ணெய் தேவையான அளவு.
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் தோலுரித்த சின்ன வெங்காயம் 20 பூண்டு 10 பல் வர மிளகாய் 4 லெமன் சைஸ் புளி கொத்தமல்லி கருவேப்பிலை உப்பு தேவையான அளவு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். ஒரு குழி கரண்டியில் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அரைத்த சட்னியின் மீது ஊற்றி கலந்து ஒரு பவுலில் மாற்றி வைத்துக் கொள்ளவும்.

இப்போது சுவையான காரசாரமான வெங்காய சட்னி தயார் இதனை அனைத்து டிபன்களுக்கும் வைத்து சாப்பிடலாம். சுவை நன்றாக இருக்கும்.
— பா. பத்மாவதி
Comments are closed, but trackbacks and pingbacks are open.