அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

வெஜ் மோமோஸ் ! சமையல் குறிப்பு – 21

திருச்சியில் அடகு நகையை விற்க

ணக்கம் சமையலறை தோழிகளே!

இன்னைக்கு நாம்ப பாக்க போற ரெசிபி வெஜ் மோமோஸ். இது குட்டீஸ்க்கு ரொம்ப பிடிச்ச ஒன்னுன்னு கூட சொல்லலாம். என்ன இந்த ரெசிபி செய்ய நமக்கு தான் கொஞ்சம் வேலை அதிகம் இருந்தாலும் நம்ம குட்டீஸ்காக அதை பெருசா எடுத்துக்க மாட்டோம். சரி வாங்க எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

தேவையான பொருட்கள்:-

கேரட், பீன்ஸ், முட்டை கோஸ், ஸ்வீட் கான், தக்காளி (பொடி பொடியாக நறுக்கியது) ஒரு கப், பெரிய வெங்காயம் பொடிப்பொடியாக நறுக்கியது ஒரு கப், மைதா மாவு ஒரு கப் மிளகுத்தூள் ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு தேவையான அளவு வினிகர் இரண்டு டேபிள் ஸ்பூன்.

https://www.livyashree.com/

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய காய்கறிகள் வெங்காயம் சேர்த்து ஒன்றாக கிளறவும். கிளறிய காய்கறி கலவையை ஒரு வெள்ளை துணியில் போட்டு அதில் உள்ள நீரை பிழிந்து விட்டு மீண்டும் அதே பாத்திரத்தில் காய்கறி கலவையை கொட்டி அதில், மிளகுத்தூள், வினிகர், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி வைக்கவும். இப்போது, மோமோஸ் செய்ய மாவு பிசையலாம். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து பூரி மாவு பிசைவது போல் நன்கு பிசைந்து பத்து நிமிடம் மூடி வைக்கவும். பிறகு, அந்த மாவை பூரி மாவு தேய்ப்பது போல் தேய்த்து மோமோஸ் அளவிற்கு சிறு சிறு உருண்டைகளாக பிடித்து தேய்த்து அதனுள் காய்கறி கலவை ஒரு ஸ்பூன் வைத்து மெதுவாக சுருட்டி நமக்கு வேண்டிய உருவில் டிசைன் செய்து கொள்ளலாம்.

வெஜ் மோமோஸ்
வெஜ் மோமோஸ்

அதன் பின் இட்லி பாத்திரத்தில் பத்து நிமிடம் பிடித்து வைத்த மோமோசை வைத்து வேகவிடவும். 10 நிமிடம் கழித்து மோமோசை சூடாக டொமேட்டோ கெட்சப் அல்லது ஸ்கிரீன் சட்னியுடன் சேர்த்து சூடாக பரிமாறவும்.

 

 -பா. பத்மாவதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.