அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

வெஜிடபிள் ரவா இட்லி! சமையல் குறிப்பு – 20

திருச்சியில் அடகு நகையை விற்க

வணக்கம் சமையலறை தோழிகளே! இன்னைக்கு நம்ம குட்டிஸ்க்கு பிடிச்ச மாதிரி ஒரு ரெசிபி. இட்லி நார்மலா அரிசி மாவுல செய்யாம ரவைல வெஜிடபிள்ஸ் மிக்ஸ் பண்ணி செய்ய போறோம். யூஸ்வலா சாப்பிடுற இட்லி மாதிரி இல்லாம, இது வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும். சரி வாங்க எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

ரவை 1 கப், தயிர் 1 கப், கேரட், பீன்ஸ், ஸ்வீட் கான் பொடியாக நறுக்கியது 1 கப், கடுகு, உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன், மஞ்சத்தூள் ஒரு சிட்டிகை, தண்ணீர் தேவையான அளவு உப்பு தேவையான அளவு.

செய்முறை:-

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஒரு வாணலியில் எண்ணெய் கடுகு, உளுத்தம் பருப்பு, நறுக்கிய காய்கறிகள், மஞ்சத்தூள் சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ரவை, தயிர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து ஏற்கனவே தாளித்த காய்கறிக் கலவை தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து 20 நிமிடம் மூடி வைக்கவும்.

வெஜிடபிள் ரவா இட்லி
வெஜிடபிள் ரவா இட்லி

பிறகு, இட்லி பாத்திரத்தில் மாவை ஊற்றி 10 நிமிடம் வேக விட்டு எடுக்கவும். இப்போது சூடான சுவையான வெஜிடபிள் இட்லி தயார். இதனை தேங்காய் சட்னியுடனும் தக்காளி சட்னி உடனும் சேர்த்து சாப்பிடலாம். சுவை வித்தியாசமாக இருக்கும்.

 

 -பா. பத்மாவதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.