சமையல் குறிப்பு: வெஜி ஃபேன் கேக்!
வணக்கம் சமையலறை தோழிகளே! இன்னைக்கு நாம செய்யப் போற ரெசிபி வெஜிடேரியன்ல ஃபேன் கேக். அதுவும் கடலை மாவு வெங்காயம் வெச்சி எப்படி செய்யறதுன்னு பாக்க போறோம். இது சூடாவும் சுவையாகவும் கூட ஒரு கிரீன் சட்னியோ இல்ல ரெட் சட்னியும் வச்சு சாதாரணமா ஒரு பிரேக்ஃபாஸ்ட் மாதிரியோ இல்ல ஈவினிங் ஸ்னாக்ஸாவோ செஞ்சு சாப்பிடலாம். சரி வாங்க இதை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:-
கடலை மாவு ஒரு கப், அரிசி மாவு அரை கப், நீளவாக்கில் நறுக்கிய முட்டைக்கோஸ் ஒரு கப், பெரிய வெங்காயம் ஒரு கப், பச்சை மிளகாய் இரண்டு நறுக்கியது, தக்காளி ஒன்று பொடியாக நறுக்கியது, மிளகாய் தூள் அரை ஸ்பூன், மல்லித்தூள் ஒரு ஸ்பூன், சீரகத்தூள் ஒரு ஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன், உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு, கடுகு உளுத்தம் பருப்பு தேவையான அளவு.
செய்முறை:-
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் சிறிது கடுகு உளுத்தம் பருப்பு வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு பேஸ்ட் நறுக்கிய முட்டைகோஸ் பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள் உப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு கிளறி அதனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும். அந்த கலவையுடன் கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

பிறகு, ஒரு தோசை கல்லில் ஃபேன் கேக் அளவில் ஊற்றி சிறிது எண்ணெய் விட்டு பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுத்தால் சுவையான சூடான வெஜி ஃபேன் கேக் தயார் இதனை நார்மல் கல்லை சட்னி அல்லது கிரீன் சட்னியுடன் சுவைத்து சாப்பிடலாம். சுவையானதாகவும் வித்தியாசமானதாகவும் இருக்கும்.
— பா. பத்மாவதி
Comments are closed, but trackbacks and pingbacks are open.