எஃக் போர்த்தா ரெசிபி! சமையல் குறிப்பு – 46
வணக்கம் சமையலறை தோழிகளே! இன்னைக்கு பாக்க போற ரெசிபி எக் வெச்சி சட்டுனு புதுவிதமான ஒரு டிஷ். இதுவரைக்கும் இந்த மாதிரி ட்ரை பண்ணி இருப்பீங்களானு தெரியல. வாங்க எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:-
வேகவைத்த முட்டை 2, பெரிய வெங்காயம் நறுக்கியது ஒன்று, பூண்டு 10 பல், வரமிளகாய் 6, எண்ணெய் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு. கொத்தமல்லி இலை சிறிது
செய்முறை:-
ஒரு தவாவில் 10 பல் பூண்டு வர மிளகாய் சேர்த்து நன்கு வேகம் வரை சுட்டு எடுத்துக் கொள்ளவும். பிறகு அதே தவாவில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நீலவாக்கில் கட் செய்த பெரிய வெங்காயம் சேர்த்து சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது ஒரு தட்டில் சுட்டு எடுத்த பூண்டு, வர மிளகாய், ஒரு ஸ்பூன் உப்பு, பொறித்த வெங்காயம், ஒரு ஸ்பூன் எண்ணெய், அவித்த முட்டை சேர்த்து நன்கு மசித்து (கையினால் பிசைய வேண்டும்) சிறிது கொத்தமல்லி இலை தூவி சிறு சிறு உருண்டைகளாக பிடித்து சூடான சாதத்தில் வைத்து சாப்பிடலாம்.

சுவை வித்தியாசமானதாகவும் புதுவிதமாகவும் இருக்கும்.
– பா. பத்மாவதி








Comments are closed, but trackbacks and pingbacks are open.