சமையல் குறிப்பு: இன்ஸ்டன்ட் மெதுவடை!
வணக்கம், சமையலறை தோழிகளே! எதிர்பாராதவிதமா நம்ம வீட்டுக்கு உறவினர்கள் வந்தாங்கன்னா அவங்களுக்கு என்ன செய்து தரலாம்னு யோசிக்காமல் சட்டுனு நான் சொல்லப் போற இன்ஸ்டன்ட் மெதுவடைய ட்ரை பண்ணி பாருங்க, உங்க உறவினர்கள் அசந்து போயிடுவாங்க, சரி வாங்க நம்ம இதை எப்படி செய்றதுன்னு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:-
அவுல் 50 கிராம், ரவை 50 கிராம், தயிர் ஒரு கப், உப்பு தேவையான அளவு, பேக்கிங் சோடா சிறிதளவு, பொடித்த மிளகு ஒரு ஸ்பூன், கொத்தமல்லி கருவேப்பிலை பொடியாக நறுக்கியது சிறிதளவு, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது 2, வேக வைத்த உருளைக்கிழங்கு மசித்தது ஒன்று, இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன், எண்ணெய் பொறிக்க.
செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் அவுல், ரவை, தயிர், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து பத்து நிமிடம் ஊற வைக்கவும். பிறகு, அதனுடன் பேக்கிங் சோடா, பொடித்த மிளகு, கொத்தமல்லி கருவேப்பிலை, பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு, இஞ்சி பூண்டு பேஸ்ட் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து பிசைந்து கையில் சிறிது எண்ணெய் தடவி மெதுவடை அளவு மாவை தட்டி காய்ந்த எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

இப்போது,சூடான சுவையான இன்ஸ்டன்ட் மெதுவடை தயார். இதனை ஈவினிங் ஸ்நாக்ஸ் டீயுடன் அல்லது காலையில் பிரேக்ஃபாஸ்ட் ஆகக்கூட ஒரு சட்னி (இல்லை) பருப்பு சாம்பாருடன் வைத்து சாப்பிடலாம். சுவை நன்றாக இருக்கும்.
-பா. பத்மாவதி
Comments are closed, but trackbacks and pingbacks are open.