அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மணமணக்கும் காளான் பிரியாணி ! – சமையல் குறிப்பு-50

திருச்சியில் அடகு நகையை விற்க

வணக்கம் சமையலறை தோழிகளே! இன்னைக்கு நம்ம பாக்க போற ரெசிபி காளான் பிரியாணி. வாங்க எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

காளான் – 1/2 கிலோ, தக்காளி – 2 (வெட்டியது) வெங்காயம் –1 (வெட்டியது), பாசுமதி அரிசி –2 கப், இஞ்சி பூண்டு, பேஸ்ட் – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3 (வெட்டியது), கொத்தமல்லி – 1/4 கப், புதினா – 1/4 கப் (வெட்டியது), எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், நெய் – 3 டேபிள் ஸ்பூன், தேங்காய் பால் – 1/2 கப், தயிர் – 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் தூள் – 2 டீஸ்பூன், மல்லி தூள் – 2 டீஸ்பூன், சோம்பு தூள் – 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், பிரியாணி இலை – 1, ஏலக்காய் – 3, இலவங்கம் – 2, கிராம்பு – 5, தண்ணீர் – 3 கப், உப்பு தேவையான அளவு.

செய்முறை:-

https://www.livyashree.com/

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அரிசியை கழுவி அந்த அரிசியில் 1/2 எலுமிச்சை பழத்தை பிழிந்து விட்டு கலக்க வேண்டும். கசகசாவை நீரில் ஊற வைத்து பின் அதனுடன் முந்திரி பருப்பைப் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வெங்காயத்தையும், மிளகாயையும் அரைத்துக் கொள்ள வேண்டும். காளானை தேவையான அளவு கட் பண்ணி வைத்து கொள்ள வேண்டும். பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், கடல் பாசி, சாதிப்பத்ரி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். அது காய்ந்தவுடன் நாம் அரைத்து வைத்து இருந்த பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும். பின் கட் பண்ணி வைத்த காளானை போட்டு வதக்கவும். ஒரு நிமிடம் வதக்கிய பின் இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து வதக்கவும். பின் அரைத்து வைத்த கசகசா முந்திரியை சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்து வைத்து இருக்கும் மசாலாவை சேர்க்கவும். அதனுடன் தேவையான அளவு உப்பு,நெய், மஞ்சள் சிறுதி எண்ணெய் சேர்த்து வதக்க வேண்டும். பின்பு தேங்காய்ப்பாலும் சேர்க்க வேண்டும். அதனுடன் ஊற வைத்த பிரியாணி அரிசியை குக்கரில் போட்டு கிண்டி மூடிவிட வேண்டும். ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து ஐந்து நிமிடங்கள் கழித்து நிறுத்தி விடவும்.ஆவி நின்றவுடன் குக்கரைத் திறந்து பிரியாணியை வேறு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும்.

காளான் பிரியாணி
காளான் பிரியாணி

அதனுடன் பொடியாக நறுக்கி வைத்திருந்த மல்லி மற்றும் புதினா இலைகளை சேர்த்து ஒரு முறை கிளறி விட வேண்டும். இப்போது சுவையான காளான் பிரியாணி தயார்.

 

-பா. பத்மாவதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.