சமையல் குறிப்பு: பன்னீர் ஃபேர்ட் நெக்ஸ்ட் சாட்!
வணக்கம் சமையலறை தோழிகளே! இன்னைக்கு நம்ம பார்க்கப் போற ரெசிபி இதுவரைக்கும் நீங்க யாரும் ட்ரை பண்ணாத ஒரு புது ஸ்நாக்ஸ் வகையான பனீர் ஃபேர்ட் நெஸ்ட் சாட் தாங்க. இதோட நேம்மே புதுசா இருக்குல்ல, சரி வாங்க இதை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :-
வறுத்த சேமியா 100 கிராம், பனீர் துருவியது 250 கிராம், கொத்தமல்லி, கருவேப்பிலை பொடியாக நறுக்கியது சிறிதளவு, இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 2 பொடியாக நறுக்கியது, கடலை மாவு ஒரு கப், சோள மாவு 4 டேபிள் ஸ்பூன், காஷ்மீர் ரெட் சில்லி பவுடர் 1 ஸ்பூன், ட்ரை மேங்கோ பவுடர் 1 டேபிள் ஸ்பூன், ஓமம் 1 டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு, எண்ணெய் பொறிக்க தேவையான அளவு.
செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் துருவிய பனீர், நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், காஷ்மீர் சில்லி பவுடர், கடலை மாவு, ஓமம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து 10 நிமிடம் மூடி வைக்கவும். இன்னொரு பாத்திரத்தில் சிறிது துருவிய பனீர், சிறிது உப்பு, டிரை மேங்கோ பவுடர் சேர்த்து பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும். இப்போது ஏற்கனவே, பிசைந்து மூடி வைத்த பனீர் கலவையை சிறிது சிறிதாக உருண்டை பிடித்து அதனை ஃபேர்ட் நெக்ஸ்ட் மாதிரி செய்து அதனை சோள மாவு கரைசலில் கோட் செய்து வறுத்த சேமியாவை அதன் மேல் தூவி சூடான எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொறித்து எடுக்கவும். அதன் பின் ஏற்கனவே சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்திருந்த பன்னீர் உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொறுத்து எடுக்கவும்.

இப்போது ஃபேர்ட் நெஸ்ட் தயார். இப்போது இதனை அலங்கரிக்க க்ரீன் சாஸ் அல்லது டொமேட்டோ சாஸ் ஒரு ஸ்பூன் அதன் மேல் வைத்து அதனுடன் பொறித்த பன்னீர் உருண்டைகளை வைத்து கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும். இப்போது, இதை பார்ப்பதற்கு அசல் ஃபேர்ட் நெஸ்ட் மாதிரியே இருப்பதால் அதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சுவைத்து சாப்பிடுவர்.
– பா. பத்மாவதி.
Comments are closed, but trackbacks and pingbacks are open.