சமையல் குறிப்பு: டேஸ்டி ஷாஜி துக்கடா!
வணக்கம் சமையலறை தோழிகளே! இன்னைக்கு நாம்ப பாக்க போற ரெசிபி நார்த் இந்தியன் ஸ்டைல் ரெசிபியான டேஸ்டி ஷாஜி துக்கடா தாங்க. சட்டுன்னு சென்சிடலாம். சரி வாங்க எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பால் 3 கப், ஏலக்காய் தூள் 1 ஸ்பூன், சர்க்கரை 1/4 கப், பிரட் துண்டுகள் 6 , நெய் தேவையான அளவு, முந்திரி, பாதாம், பிஸ்தா பொடியாக நறுக்கியது 3 ஸ்பூன்.
செய்முறை
மூன்று கப் பாலை சுண்டக்காய்ச்சி அதில் ஏலக்காய் தூள் கால் கப் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி இறக்கவும். 6 பிரட் துண்டுகளில் ஓரத்தில் உள்ள பிரவுன் பகுதிகளை கட் செய்து விட்டு 4 துண்டுகளாக நறுக்கவும்.

அவற்றை நெய்யில் மொறு மொறுவென பொன்னிறமாகும் வரை பொறித்து எடுக்கவும். பிறகு, பால் கலவையில் ஐந்து நிமிடம் ஊறவைத்து முந்திரி, பிஸ்தா, பாதாம் துகள்களை நெய்யில் வறுத்து பால் பிரட் கலவை மீது தூவி அலங்கரித்து பரிமாறவும்.
– பா. பத்மாவதி
Comments are closed, but trackbacks and pingbacks are open.