அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ரீல்ஸ் மோகத்தில் கேடி_குமரேசன் செய்த காரியம் … போலீசார் வைத்த டிவிஸ்ட் !

திருச்சியில் அடகு நகையை விற்க

இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் எங்கேதான் போய் நிறுத்தப்போகிறதோ? என்று தலையில் அடித்துக் கொள்ளும் விதமாகத்தான் தினம் தோறும் கேலிக்கூத்தான சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. அந்த வரிசையில் இதுவும் ஒன்று.

திருப்பத்தூர் மாவட்டம்  ஜோலார்பேட்டை  அடுத்த  பால்நாங்குப்பம் என்ற கிராமத்தை சேர்ந்த கேடி_குமரேசன் என்பவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை பதிவிட்டு லைக்குகளையும், ஷேர்களையும் குவித்து வருகிறார். சில அதிர்ச்சியூட்டும் வீடியோக்களையும் குமரேசன் பதிவிட்டு வந்திருக்கிறார்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இந்த நிலையில், ஜோலார்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு தனது நண்பர் ஒருவர் உதவியோடு குமரேசன்  Ramp Walk – இல், காவல் நிலைய வாசல் படியை எட்டி பார்த்து சட்டென  திரும்பி வருவது போல எடுக்கப்பட்ட வீடியோ பின்னணியில்  “நம்மளால அவனை தொடக் கூட முடியாது சார்.. இந்த ஏரியாவுல அவன் தான் பெரிய கை” என்று மாரி படத்தில் போலீசார் பேசும் வசனம் ஒலிக்கிறது.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

அத்தோடு…  கும் இருட்டில் இருக்கும் ஒரு தாரோட்டில்  குமரேசன் ஏதோ ஒரு ரசாயன பவுடுரை கொட்டி பெட்ரோல் ஊற்றி வெடிக்கவைத்து குபீரென தீ பிழம்பு எரியும் கட்சியின் பிண்ணனியில்,  “குவாரிக்கு  வெடி வைக்கும் 15 கிலோ வெடி மருந்து வச்சு இருக்கிறேன்  உருட்டி… உருட்டி … வீசுனேன் ஊரே காலி ஆகிடும் ” என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேசும் வசனமும் பிண்ணனியில் ஒலிக்கிறது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இந்த இருண்டு ரீல்ஸ்களை ஒட்டி இணைத்து  அவரது  Instagram பக்கமான -“stylish_racer_108′  பெயரில்  kd_kumarasan   பதிவிட்டிருந்தார்.  இந்த வீடியோ பார்ப்பவர்களின் மனதை பதைபதைக்கச் செய்திருக்கிறது.

இந்த  அதிர்ச்சியூட்டும் வீடியோ கடந்த நவம்பர் 20-ஆம் தேதி  சமூக வலைதளங்களில் வைரலானது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், ஆபத்தினை ஏற்படுத்தும் வகையிலும், வன்முறையை ஏற்படுத்தும் வகையிலும் வீடியோவை பதிவேற்றம் செய்தவர்  மீது கடும்  நடவடிக்க எடுக்க வேண்டும், இது போன்றவர்களை போலீசார் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று இன்ஸ்டா இணையவாசிகள் கமெண்ட்களை தட்டிவிட்டு வந்தனர்.

அதன் பிறகுதான் ஜோலார்பேட்டை போலீஸ்காரர்கள் அலறியடித்துக் கொண்டு கேடி_குமரேசனை தேடிச் சென்று  கடந்த நவம்பர் 25-ந்தேதி  தூக்கி உள்ளே (ஜெயிலில்) வைத்திருக்கிறார்கள். அவரது ஸ்டைலீஸ்_ரேசர்_108  இன்ஸ்டா பக்கத்தையும் முடக்கி இருக்கிறார்கள்.

ரீல்ஸ் மோகம்இதுபோல, எத்தனை பேரை எத்தனை முறை கைது செய்தாலும், ரீல்ஸ் மோகத்தில் உயிர்விட்ட சம்பவங்கள் நடந்தாலும், இன்னும் திருந்தாத ஜென்மங்களும் இருக்கத்தான் செய்கின்றன என்பதுதான் தமிழகத்தின் சாபக்கேடு!

—   மணிகண்டன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.