அங்குசம் சேனலில் இணைய

கரூர் சம்பவம் ! முதல்வர் பதில் !

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கரூர் சம்பவம் ! முதல்வர் பதில் !

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

கரூர்ல நடந்தது

பெருந்துயரம்; கொடுந்துயரம்!

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இதுவரை நடக்காத

துயரம்;

இனி,

நடக்கூடாத துயரம்.

மருத்துவமனைக்கு

நான் நேர்ல போய்

பார்த்த காட்சிகள்

இன்னும் என்

கண்ணை விட்டு அகலல.

கனத்த மனநிலையிலயும்

துயரத்துலயும்தான்

இன்னும் இருக்கேன்.

செய்தி கிடைச்சதும்

மாவட்ட நிர்வாகத்தை

முடுக்கிவிட்டு,

எல்லா உத்தரவுகளையும்

பிறப்பிச்ச பின்னாலும்,

என்னால வீட்டுல

இருக்க முடியல;

உடனே அன்னைக்கு

நைட்டே கரூருக்குப் போனேன்.

குழந்தைகள்,

பெண்கள்னு

41 உயிர்களை

நாம இழந்திருக்கோம்.

இறந்து போனவங்க

குடும்பத்துக்கு,

தலா பத்து லட்ச ரூபாய்

அறிவிச்சு,

அத உடனடியா

வழங்கிட்டு இருக்கோம்.

ஆஸ்பிட்டல்ல

சிகிச்சை பெற்று

வர்றங்களுக்கு,

அரசு சார்புல

முழு சிகிச்சைய

வழங்கி வர்றோம்.

நடந்த சம்பவத்துக்கான

முழுமையான –

உண்மையான காரணத்த

ஆராய,

முன்னாள் நீதியரசர்

அருணா ஜெகதீசன் அவர்கள்

தலைமையில,

ஒரு நபர்

விசாரணை ஆணையம்

அமைக்கப்பட்டிருக்கு.

ஆணையத்தோட அறிக்கை

அடிப்படையில,

அரசோட

அடுத்தகட்ட நடவடிக்கைகள்

இருக்கும்னு உறுதியளிக்குறேன்.

இதுக்கிடையே,

சோஷியல் மீடியால

சிலர் பரப்புற

வதந்திகளையும்,

பொய் செய்திகளையும்

பார்த்துட்டுதான் இருக்கேன்.

எந்தவொரு

அரசியல் கட்சித் தலைவரும்

தன்னோட தொண்டர்களும் –

அப்பாவி பொதுமக்களும்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

இறக்குறத

எப்போதும் விரும்ப மாட்டாங்க.

இந்த சம்பவத்தில,

உயிரிழந்தவங்க

எந்த கட்சிய சார்ந்தவர்களாக

இருந்தாலும்,

என்னை பொறுத்தவரைக்கும்,

அவங்க நம்மோட

தமிழ் உறவுகள்!

எனவே

சோகமும்,

துயரமும் சூழ்ந்திருக்க

இந்த நிலையில,

பொறுப்பற்ற முறையில

விஷமத்தனமான செய்திகளை

தவிர்க்கணும்னு

கேட்டுக்குறேன்.

அரசியல் கட்சிகள்,

பொது அமைப்புகள்,

இதுபோன்ற

நிகழ்ச்சிகள் நடத்தும்போது,

இனிவரும் காலங்கள்ல,

எத்தகைய பொறுப்போடு

நடந்துக்கணும் என்ற

விதிமுறைகளை

வகுக்க வேண்டியது,

நம்ம எல்லாரோட

கடமை!

எனவே,

நீதியரசரின்

ஆணைய அறிக்கை

கிடைச்ச பிறகு,

எல்லா

அரசியல் கட்சிகள்,

பொது அமைப்புகளோடு

ஆலோசனை நடத்தி –

இதற்கான

விதிகள்,

நெறிமுறைகள்

வகுக்கப்படும்னு

உறுதியளிக்குறேன்.

அத்தகைய நெறிமுறைகளுக்கு

எல்லாரும்

ஒத்துழைப்பு தருவாங்கனு

நம்புகிறேன்.

மனித உயிர்களே,

எல்லாத்துக்கும் மேலானது!

மானுடப் பற்றே

அனைவர்க்கும் வேண்டியது!

அரசியல் நிலைப்பாடுகள்,

கொள்கை முரண்பாடுகள்,

தனிமனிதப் பகைகள்னு

எல்லாத்தையும்

விலக்கி வெச்சிட்டு,

எல்லாரும்,

மக்களோட நலனுக்காக

சிந்திக்கணும்னு

கேட்டுக்குறேன்.

தமிழ் நாடு எப்பவுமே

நாட்டுக்கு பலவகைகள்ல

முன்னோடியா தான்

இருந்திருக்கு.

இதுபோன்ற நிகழ்வுகள்

இனி எந்த காலத்திலயும்

நடக்காம தடுக்க வேண்டியது

நம்ம எல்லாரோட

கடமை!

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.