துறையூரில் கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு புதிய பேருந்து நிலையம் அமைத்திட கோரிக்கை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

வீடியோவை காண

Frontline hospital Trichy

துறையூரில் கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு புதிய பேருந்து நிலையம் அமைத்திட கோரிக்கை !திருச்சி மாவட்டம் துறையூர், ஆத்தூர் ரோட்டில் அமைந்துள்ளது நல்ல காவல் அம்மன் கோவில். இந்த கோவிலுக்கு சொந்தமாக துறையூர் முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா அருகில் திருச்சி ரோட்டில் சுமார் 12 ஏக்கர் 98 சென்ட் நிலங்கள் உள்ளன. இவற்றின் தற்போதைய மதிப்பு கோடிக்கணக்கான ரூபாய் ஆகும்.

நல்ல காவல் அம்மன் கோவில்
நல்ல காவல் அம்மன் கோவில்

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

துறையூரின் முகப்பில் திருச்சி செல்லும் பிரதான சாலையின் முன்பாகவே அமைந்துள்ள கோவிலுக்கு சொந்தமான நிலங்களை தற்போது தனி நபர்கள் அத்துமீறி ஆக்கிரமித்துக் கொண்டு அந்த இடங்களில் வணிக வளாகங்கள் வாகனம் பழுது பார்க்கும் பட்டறை குடியிருப்புகள் மற்றும் வீட்டுமனைகளாகவும் மாற்றிஅதனை வருவாய்த் துறையினர் மூலம் முறைகேடாக பட்டா செய்து விற்றும், வாடகைக்கு விட்டும் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகின்றனர்.

உள்ளூர் பிரச்சினை என்பதால் கருத்து தெரிவிக்கவே பலர் அச்சம் கொள்ளும் சூழல் நிலவுகிறது. பெயர், விவரம் தவிர்த்து இது குறித்து பேசிய சமூக ஆர்வலர்கள், “துறையூரில் நகர்ப்புற பகுதி மற்றும் விரிவாக்கப் பகுதிகளில் குடியிருப்புகள் பெருகி வருவதால், தற்போது உள்ள துறையூர் பேருந்து நிலையம் போதுமான இடவசதி இல்லாத காரணத்தால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

கடந்த சில மாதங்கள் முன்பு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு , மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் துறையூரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு துறையூரில் பல்வேறு இடங்களை ஆய்வு செய்தனர். ஆனால், அவை எதுவும் போதுமான இடவசதிகளோடு அமையவில்லை.

நல்ல காவல் அம்மன் கோவில் - சொந்தமான இடம்
நல்ல காவல் அம்மன் கோவில் – சொந்தமான இடம்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தற்போது திருச்சி ரோட்டில் அமைந்துள்ள கோவில் நிலமானது புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு ஏதுவாக இருக்கும். இப்பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமையப்பெற்றால் பெரம்பலூர் ,சென்னை, முசிறி, நாமக்கல், கோயம்புத்தூர், ஆத்தூர், சேலம்,திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு நான்கு முனைகளிலும் பேருந்துகள் எளிதாக சென்று வரக்கூடிய அமைப்பு இருக்கிறது. நெருக்கடி மிகுந்த நகரத்திற்குள் பேருந்துகள் வந்து செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிக்கு மாற்று தீர்வாகவும் அமையும்.

பலரது ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலத்தை தனிநபர்களிடமிருந்து மீட்டு, நல்ல காவல் தாய் அம்மன் கோவில் நிலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.” என்கிறார்கள்.

இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது , “நல்ல காவல் தாய் அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் முழுவதும் ஊழிய மானிய நிலங்களாகும். திருக்கோயில் வசம் மீட்டெடுக்க நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இந்த கோவில் நிலங்களின் ஆக்கிரமிப்பு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அது நிலுவையில் இருந்து வருகிறது. கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்திருக்கிறோம்.

நல்ல காவல் அம்மன் கோவில் - சொந்தமான இடம்
நல்ல காவல் அம்மன் கோவில் – சொந்தமான இடம்

ஆனாலும், ஆக்கிரமிப்பாளர்கள் தங்களிடம் முறையாக அவ்விடத்திற்குரிய பட்டா இருப்பதாக போலீசாரிடம் தெரிவிக்கின்றனர். அந்த ஆவணங்கள் சரியா, தவறா என்பதை போலீசார் சரிபார்க்க முடியாது என்பதாலும், உரிமையியல் சார்ந்த பிரச்சினை என்பதாலும் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளுங்கள் என்பதாக ஒதுங்கிவிடுகின்றனர். நீதிமன்றத்திலும் இந்த விவகாரம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.

விரைவில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். ஆகவே, சர்ச்சைக்குரிய கோவில் இடத்தை விற்பதாக கூறினால் பொதுமக்கள் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். நீதிமன்றத் தீர்ப்புக்காகவே காத்திருக்கிறோம். தீர்ப்பு கிடைத்தவுடன், பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகள் கண்டிப்பாக அப்புறத்தப்படும்.” என்று எச்சரிக்கிறார்கள் அறநிலையத்துறை அதிகாரிகள்.

ஜோஷ்.

 

வீடியோவை காண

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.