பிரிந்து போன காதலியை மீண்டும் சந்தித்தது போல திருமாவின் முகம் !
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு நேற்று தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த ஆதவ் அர்ஜுனா இன்று தனது என்றைக்குமான தலைவர் திருமா அவர்களை சந்தித்து ஆசி !
பெற்றது நல்ல பண்பாடான செயல்தான் . ஆட்சிக்கு வந்ததும் தனது திமுக ஆட்சியை பெரியாருக்கு அண்ணா சமர்ப்பித்தது போல தமிழக வெற்றி கழகத்தில் தனக்கு வழங்கப்பட்ட கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பை தனக்கு பயிற்சி தந்த அரசியல் ஆசான் திருமா அவர்களுக்கு சமர்ப்பித்துள்ளார் ஆதவ்.
அத்தோடு ஒரு கருத்தையும் சொல்லியிருக்கிறார் “விசிக-வும் தமிழக வெற்றிக்கழகமும் ஒன்றுதான் “என்று திருவாய் மலர்ந்துள்ளார் அர்ஜுனா .
இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக பண்பாடான ஒன்று என்றாலும் இதனுடைய விளைவு 2026 தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை பிரித்துக் கொண்டு போக ஒரு முன்னோட்டமாக இருக்குமோ என்று நினைக்கிறேன்.
பிரிந்து சென்ற தனது தளபதியை கண்டு உருகி உருகி பேசியுள்ளார் திருமா. ஆக இருவருக்குள்ளும் அவரவர் இதயத்துக்குள் ஒருவருக்கு ஒருவர் ஒரு Soft hornor இருக்கிறது என்பது புரிகிறது…. இது திமுக கூட்டணிக்கு நல்ல சகுனம் அல்ல.
2026 தேர்தலில் அதிமுக+ தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி கட்டாயம் ஏற்படும். அப்படி ஏற்படும் போது இந்த சாப்ட் கார்னர் திருமா மற்றும் அர்ஜுன் ஆகிய இருவருக்கும் தீவிரமாக வேலை செய்யும். அதன் விளைவாக திருமா அவர்களை நகர்த்திக் கொண்டு அதிமுக கூட்டணிக்கு கொண்டு செல்ல நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது இன்றைய சந்திப்பு.
அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் பிரிந்தவர் பிரிந்தவராகவே இருந்தால் வேறு அர்த்தம். பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து அளவலாவும் போது அதனுடைய அர்த்தங்கள் எதிர்காலத்தில் நிறைய விளைவுகளை ஏற்படுத்தும் திருமாவின் முகம் அர்ஜுன் அவர்களை பார்த்ததும் மிகவும் மகிழ்ந்து விட்டது. அது மட்டுமல்ல அவர் கூறிய கருத்தில் ” அர்ஜுனா அவசரப்பட்டு விட்டார். கொஞ்சம் பொறுமை காத்திருக்கலாம்” என்ற பொருள்பட பேச்சு இருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று ஆகும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இன்றைய சந்திப்பு எவ்வளவு நாகரிகமான ஒரு நகர்வோ அந்த அளவிற்கு அரசியல் சேதாரத்தையும் திமுக கூட்டணிக்கு உருவாக்கும் அரசியலில் கற்பு என்பது ஒன்று இல்லை… திமுக கூட்டணிக்கு தாலி கட்டிக் கொண்டு நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று விதி ஒன்றும் திருமாவுக்கு இல்லை அவருக்கும் ஆட்சியில் பங்கு என்பதில் ஆர்வம் உண்டு.
ஒருவேளை அதிமுக கூட்டணி உருவானால் அந்த அமைச்சரவையில் திருமா கட்சிக்கு வாய்ப்பு கிடைக்கும்…. இந்த கோணங்கள் எல்லாம் போகப் போக பேசப்படும். பிரிந்து போன காதலியை மீண்டும் சந்தித்தது போல திருமாவின் முகம் மலர்ந்து இருப்பது ஆளும் திமுகவுக்கு நல்ல சகுனம் அல்ல.
— ஜெயதேவன், எழுத்தாளர்.