சமையல் குறிப்பு- ரோஸ் கார்வஸ்!
வணக்கம், சமையலறை தோழிகளே! நம்ம டெய்லியுமே குட்டிஸ்க்கு காரமாவே ஸ்நாக்ஸ் ரெசிப்பிஸ் பாத்துட்டு இருக்கோம். இன்னைக்கு புதுசா ட்ரை பண்ணலாம்னு குட்டீஸ் மட்டும் இல்லாமல் பெரியவங்களும் சேர்ந்து சாப்பிடற மாதிரி காரமா இல்லைங்க ஸ்வீட்டா ஒரு ரெசிபி எப்படி செய்யறதுன்னு பாக்க போறோம். மேல டைட்டிலையே பார்த்து இருப்பீங்க. புதுசா இருக்குல்ல வாங்க பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முழு கொழுப்பு நிறைந்த பால் 500மிலி, கிரீக் யோகர்ட் 100கி(சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்), தொங்கு தயிர் 100கி(தயிரை நீர் இல்லாமல் வடிகட்ட கிடைப்பது இந்த தொங்கு தயிர்), பால் பவுடர் 100 கிராம், ஸ்வீட் கன்டென்ஸ்ட் மில்க் 400மிலி, ரோஸ் சிரப் 3 துளி, உலர்ந்த ரோஜா இதழ் சிறிது ஏலக்காய் பொடி ஒரு டேபிள்ஸ ஸ்பூன்.
செய்முறை
ஒரு பாத்திரத்தில் முழு கொழுப்பு நிறைந்த பால், கிரீக் யோகர்ட், தொங்கு தயிர், பால் பவுடர், ஸ்வீட் கண்டென்ஸ்ட் மில்க், ரோஸ் சிரப் இவற்றை ஒன்றாக சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும். கலந்த இந்த கலவையில் மேல் ட்ரை ரோஸ் பெட்டல்ஸ் (ரோஜா இதழ்கள்) ஏலக்காய் பொடி தூவி இட்லி பாத்திரத்தில் ஆவியில் 20 நிமிடம் நன்கு வேகவிடவும். 20 நிமிடம் கழித்து வெந்து விட்டதா என உறுதிபடுத்தி கொண்டு சூடாக அல்லது குளிர்ந்த பிறகு சீம்பால் உண்பதைப் போல் சிறு சிறு துண்டுகளாக கட் செய்து உண்ணலாம். இதன் சுவை சீம்பாலை போலவே இருக்கும். வண்ண மயமாகவும் பார்பி பிங்க் வண்ணத்தில் இருப்பதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவர்.
— பா. பத்மாவதி
Comments are closed, but trackbacks and pingbacks are open.