உலகை ஆளும் தமிழனாய் உயர்த்திய ரோட்டரி !

ரோட்டரி இண்டர்நேஷனலின் துணைத்தலைவராக, தமிழராக உலகை வலம் வரும் எக்ஸெல் குழுமத்தின் தலைவர் எம்.எம்.எம். முருகானந்தத்தின் ரோட்டரி பயணம் தொடங்கியது, திருச்சி திருவெறும்பூர் பெல் நகரில் அமைந்த, RC BHEL சிட்டி அமைப்புதான். அதன் கிளப் தலைவரின் பதவியேற்பு விழா, 25 இன்டராக்ட் (Interact) கிளப் தலைவர்களின் பதவியேற்பு மற்றும் EXCEL RYLA 26-ன் தொடக்க விழா ஆகிய முப்பெரும்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நெகிழ்ச்சியான கடந்த கால நினைவலைகளை சுழலவிட்டார் எம்.எம்.எம். முருகானந்தம்.

ரோட்டரி ”’சார்ட்டர் பிரசிடென்ட்’ (Charter President) நிலையிலிருந்து ரோட்டரி இன்டர்நேஷனலின் (RI) துணைத் தலைவர் பதவி வரையிலான எனது பயணம், சக BHEL CITIANS-உடன் இணைந்து உருவாக்கிய இனிய நினைவுகளால் நிறைந்துள்ளது. சொந்த கிளப்பிற்குத் திரும்பி ரோட்டரியின் உணர்வை (Rotary’s spirit) கொண்டாடுவது எப்போதும் ஒரு சிறப்பான உணர்வைத் தருகிறது.” என்பதாக, குறிப்பிட்டார் அவர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.