கல்வித் துறைக்கு 44,000 கோடி ஒதுக்கீடு எதற்காக? அமைச்சர் கீதாஜீவன் தந்த விளக்கம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி  வ. உ .சி அரசு ஆண்கள்  மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அப்பள்ளியின் நூற்றாண்டு மற்றும் பள்ளி ஆண்டு விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்று உரை நிகழ்த்தியிருக்கிறார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர்  சேகர் வரவேற்புரை வழங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை ) பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

வ. உ .சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிஇவ்விழாவில்  பங்கேற்று அமைச்சர் கீதாஜீவன் பேசும்போது, “வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டுகளை கடந்து மாணவர்கள் நலன் கருதி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நம் முதல்வர் இம் மாதிரியான பழமை வந்த பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தி சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தான் நாங்கள் எல்லாம் இங்கு வருகை புரிந்து உள்ளோம்.  ஆண்டு விழா நடத்தினால் தான் பள்ளியின் பெருமை வெளி உலகத்திற்கு தெரிய வரும் .

வ. உ .சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிதமிழக முதல்வருக்கு  கல்வியும் மருத்துவமும் தான் எனது கண்கள் போல பார்த்து அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யபடுகிறது. புதிய திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யபடுகிறது. மாணவர்கள் எல்லாம் எதிர்கால தலைவர்களாக வர வேண்டும் என்பதற்காக …  திறமையான மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நம் முதல்வர் கல்வித் துறைக்கு 44,000 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறார் .தொடக்க கல்வி பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், வானவியல் மன்றம் , எண்ணும் எழுத்தும் திட்டம் ,இவ்வாறு ஒவ்வொரு திட்டமாக தந்து நம்முடைய திறமையை வளர்ப்பதற்காக முதல்வர் பல்வேறு திட்டங்களை தந்துள்ளார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்லூரி மேற்படிப்பு பயில்வதற்காக நம் முதல்வர் தமிழ் புதல்வன் திட்டம் கொண்டு வந்து உள்ளார். அனைத்து பள்ளி மாணவர்களும் உயர்கல்வி பயில வேண்டும் என்பதற்காகவே புதுமைப்பெண் தமிழ்ப் புதல்வன் திட்டம் என்றும், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் எல்லா கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கபட்டு உள்ளது. அறிவு ஆற்றலை வளர்த்து கொள்ள வேண்டும். கல்வி தான் அழியாத செல்வம் என மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும்.. அனைத்து மாணவர்களும் உயர் கல்வி பயில வேண்டும். அரசு பள்ளியில் இணைய வசதி, ஸ்மார்ட் அறை, பள்ளி வளாகத்தில் புதிய கட்டிடங்கள் கட்டி அரசு பள்ளியை மேம்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்” என்பதாக அவர் பேசினார்.

44,000 கோடி ஒதுக்கீடு எதற்காக?
44,000 கோடி ஒதுக்கீடு எதற்காக?

இந்நிகழ்வில் கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி,  கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர், திமுக ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் திரளானோர்  கலந்து கொண்டனர்.

 

—   மணிபாரதி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.