16 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தும் ஊரக வளா்ச்சித்துறை! நிறைவேற்றுமா தமிழக அரசு!
விருதுநகரில் 16 அம்ச கோரிக்கையை ஊரக வளர்ச்சித் துறை சங்கங்களின் கண்டன ஆர்ப்பாட்டம் 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் தர்ணா. விருதுநகர், செப்டம்பர் 24 தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை மாவட்டத் தலைமை ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமையேற்றார். ஊராட்சி செயலாளர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்று, தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட முக்கிய கோரிக்கைகள்:
தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியம் ரூ.10,000 ஆக உயர்த்தி, ஊராட்சிகள் மூலம் வழங்குதல். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு அவர்களின் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு காலமுறை ஊதியமாக ரூ.15,000 வழங்குதல். ஊராட்சி செயலாளர்களுக்கு தமிழக அரசின் ஓய்வூதியத் திட்டத்தை இணைத்து, ஊராட்சி ஒன்றிய பதிவருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தையும் வழங்குதல்.
தூய்மை காவலர்களுக்கு குடும்ப நல நிதி பிடித்தம் செய்து, அவர்கள் இறப்பின் போது ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்குதல். ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை, தேக்கநிலை ஊதியங்களை வழங்குதல். MGNREGS கணினி உதவியாளர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்கி, NHIS, GIS, PF ஆகிய நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல். இவற்றுடன் சேர்த்து மொத்தம் 16 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள், “நாங்கள் தினமும் மக்களின் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் எங்களுக்கான அடிப்படை ஊதியம், ஓய்வூதியம், குடும்ப நல நிதி போன்ற அடிப்படை உரிமைகள் கூட வழங்கப்படவில்லை. உடனடியாக எங்கள் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்” எனக் கோஷங்கள் எழுப்பினர்.
— மாரீஸ்வரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.