அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சேஃப்டி பின் ரூ.69,000 ஆயிரமா?

திருச்சியில் அடகு நகையை விற்க

நம்ம ஊர்களில் எல்லாம் ஒன்னார்ரூவா கொடுத்தா பொட்டி கடையிலேயே கிடைக்கும்னு சொல்ற மாதிரி விற்பனை ஆகுற சேஃப்டி பின் பிரபல ஃபேஷன் பிராண்டான பிராடா (Prada) சுமார் ரூ.69,000 ஆயிரத்துக்கு விற்பனை செய்றாங்க. இந்த விலை சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரணமாக நாம் அனைவரும் பயன்படுத்தும் சேஃப்டி பின், இத்தாலிய சொகுசு பிராண்டான பிராடாவின் கைவண்ணத்தில் ஒரு விலையுயர்ந்த அணிகலனாக மாறியுள்ளது.

இந்த சேஃப்டி பின், ஒரு சாதாரண உலோக ஊசியாக இல்லாமல் நூல்களால் பின்னப்பட்ட அணிகலனாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த மெட்டல் சேஃப்டி பின் ப்ரூச் (Metal Safety Pin Brooch) ஆரஞ்சு, வெளிர் நீலம் மற்றும் இளஞ்சிவப்பு போன்ற வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த சேஃப்டி பின்னின் விலை இணையத்தில் வெளியானதில் இருந்து, நெட்டிசன்கள் பிராடா நிறுவனத்தை கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

வெறும் ரூ.2-க்கு பெட்டிக் கடையில் கிடைக்கும் ஒரு பொருளுக்கு இவ்வளவு விலையா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதன் சர்வதேச விலை 775 டாலர்கள் ஆகும், இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.69,000 ஆகும். இதில் வைரங்களோ அல்லது வேறு எந்த விலைமதிப்புள்ள கற்களோ பதிக்கப்படவில்லை என்பது தான் சுவாரசியமே. இந்த பிராடா நிறுவனம் அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வது இது முதல் முறையல்ல. முன்னதாக, இந்திய வடிவமைப்பான கோலா செருப்புகளை சுமார் 1,000 முதல் 1,200 டாலர் வரை விற்பனை செய்து சர்ச்சையில் சிக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

  -மு. குபேரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.