அங்குசம் சேனலில் இணைய

பன் பட்டர் சாக்லேட் ஜாம் விற்பனையில் கலக்கும் கண்ணன் பேக்கரி!

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சேலம் அம்மாபேட்டை காந்தி மைதானம், பிரேம் போட்டோ ஸ்டுடியோ அருகில் உள்ள கண்ணன் பேக்கரி 60 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்தக் கடையில் தினசரி மாலையில் விற்கப்படும் பன் பட்டர் ஜாம் தான் இங்கு ஸ்பெஷல் அயிட்டமே. தினசரி பிரஷ்ஷாக அவர்களே பன்,ஜாம், பட்டர் ,குல்கந்து இவற்றை சொந்தமாக தயாரிப்பதால் பன் பட்டர் ஜாம்  ரொம்ப சாஃப்ட்டாக செம டேஸ்டாக ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

கண்ணன் பேக்கரிசேலம் மாநகரத்தின் பல பகுதிகளில் இருந்து கண்ணன் பேக்கரிக்கு பன் பட்டர் ஜாம் வாங்குவதற்கு என்றே தினசரி வாடிக்கையாளர்கள் நிறைய பேர் வருவதை காணலாம். பன் பட்டர் ஜாம், பன் பட்டர் குல்கந்து ஜாம், பன் பட்டர் இவற்றின் வரிசையில் கண்ணன் பேக்கரியில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பன் பட்டர் சாக்லேட் ஜாம் குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளது பெரியவர்களும் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஒரு மிருதுவான பன்னை இரு பாதியாக அறுத்து இரு உள் பக்கங்களிலும் பட்டர் நன்கு தடவி அதன் மேல் சாக்லேட் சுவை கொண்ட ஜாமை ( இவர்கள் சொந்த தயாரிப்பு) நன்கு தடவி பன் பட்டர் சாக்லேட் ஜாமாக நமக்கு சாப்பிட தருகிறார்கள்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

கண்ணன் பேக்கரிஇதன் ருசியை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை, ஒரு புதுவித சுவையில் சூப்பராக இருந்தது. அதேபோல் இவர்களிடம் ஸ்லைஸ் பிரட் பாக்கெட் தினசரி பிரஷ்ஷாக கிடைக்கும். இதுவரை வெறும் பன் பட்டர் ஜாம் மட்டும் சாப்பிட்டு வந்தவர்கள் இந்த புது சுவையான பன் பட்டர் சாக்லேட் ஜாமை அம்மாபேட்டை காந்தி மைதானம் கண்ணன் பேக்கரிக்கு ஒரு முறை சென்று சுவைத்துப் பாருங்கள்.

 

—  மு. குபேரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.