சேலம் – கெங்கவல்லி (தனி) தொகுதியை கைப்பற்றப் போகும் கட்சி எது ? களம் காணப்போகும் வேட்பாளர் யார் ?
சேலம் – கெங்கவல்லி (தனி) தொகுதியை கைப்பற்றப் போகும் கட்சி எது ? களம் காணப்போகும் வேட்பாளர் யார் ?
சேலம் மாவட்டத்தில், கெங்கவல்லி (தனி) தொகுதி அருந்ததியர் ஓட்டுகளை விட அதிக பறையர் ஓட்டுகளை உள்ளடக்கிய தொகுதி. 1951 முதல் 2006 ஆம் ஆண்டு வரையில், தலைவாசல் தொகுதியாக இருந்து வந்தது. அதன்பிறகு, கெங்கவல்லி (தனி) தொகுதியாக மாற்றம் கண்டது. இதுவரை 15 சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொண்ட தொகுதியில், கடந்த 2006 ஆம் ஆண்டுக்கு பிறகு, திமுக தொடர் தோல்விகளை கண்டு வருகிறது.
இந்த தொகுதியில், அதிமுக தரப்பில் சிட்டிங் எம்.எல்.ஏ. நல்லதம்பி மீண்டும் போட்டியிட விரும்புகிறார். முன்னாள் எம்எல்ஏ (2016) மருதமுத்துவும் சீட் கேட்கிறார். தி.மு.க தரப்பில், சேலம் மாநகராட்சியின் முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி எதிர்பார்ப்பில் இருக்கிறார். கடந்த இரண்டு முறையும் இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவியிருந்தாலும், தலைமையுடன் இருக்கும் நெருக்கத்திலிருந்து எப்படியும் சீட் வாங்கிவிடலாம் என்ற நினைப்பில் இருக்கிறார்.
கடந்தமுறை எப்படியும் சீட் கிடைக்கும் என்று எதிர்ப்பார்ப்பில் இருந்து கடைசி நேரத்தில் வாய்ப்பை நழுவவிட்ட வீரகனூர் வழக்கறிஞர் கணேசன் இந்தமுறை எப்படியும் சீட் வாங்கிவிட வேண்டுமென்ற முனைப்பில் இருக்கிறார். தலைவாசல் முன்னால் எம்எல்ஏ குணசேகரன் மருத்துவம் படித்த தனது மகளுக்கும்; முன்னாள் ஒன்றிய சேர்மன் அழகாம்பாள் தனது மருமகன் தேவேந்திரனுக்கும் சீட் வாங்கித் தந்துவிட ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அங்குசம் ஆடுகளம். முழுமையான வீடியோவை காண :
இதற்கிடையில், தலைவாசல் மண்ணின் மைந்தர் என்று கருதப்படும் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னத்துரையும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார். கெங்கவல்லியை பொருத்தவரையில் ரேகாபிரியதர்ஷினியா? சின்னதுரையா? என்பதில்தான் போட்டியே என்கிறார்கள். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வெறும் 7321 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தது திமுக.
அதனை தொடர்ந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில், கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி வாங்கிய ஓட்டுகளின் எண்ணிக்கையை முந்தைய சட்டமன்றத் தேர்தலில் வாங்கிய ஓட்டுகளோடு ஒப்பிட்டாலும்கூட, வெறும் 5860 ஓட்டுகளே எதிர்க்கட்சிகள் கூடுதலாக பெற்றிருந்தன. இவை, கொஞ்சம் மெனக்கெட்டால் தொகுதியை எப்படியும் கைப்பற்றிவிடலாம் என்ற நம்பிக்கையை திமுகவுக்கு கொடுப்பதாக அமைந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய தினசரி சந்தை மற்றும் தெற்காசியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்காவை கொண்ட தொகுதியாக அமைந்திருக்கிறது. பெரும்பான்மை மக்களின் பிழைப்பு விவசாயத்தை நம்பியும், சேகோ என்றழைக்கப்படும் ஜவ்வரிசி தொழிற்சாலைகளை நம்பியும் அமைந்திருக்கிறது. கொல்லிமலையிலிருந்து உற்பத்தியாகும் சுவேத நதி ஒரு காலத்தில் விவசாயத்திற்கும் குடிநீர்த்தேவைக்கான ஆதாரமாகவும் அமைந்திருந்த நிலையில், தற்போது அது கழிவுகளை தாங்கிவரும் மற்றுமொரு கூவமாக மாறிவிட்டதாக வேதனையில் இருக்கிறார்கள்.
இந்த தொகுதியில் அமைந்திருக்கும் ஒரே ஒரு ரயில்வே நிலையமான தலைவாசலில், சென்னை செல்லும் எந்த ரயிலும் நின்று செல்வதில்லை என்பதும் இத்தொகுதி மக்களின் பெருங்குறையாக நீடித்து வருகிறது.
இத்தொகுதியின் சாதகம் பாதகம் குறித்து அலசுகிறது,
அங்குசம் ஆடுகளம். முழுமையான வீடியோவை காண :
சேலம் – கெங்கவல்லி (தனி) தொகுதியை கைப்பற்றப் போகும் கட்சி எது ? களம் காணப்போகும் வேட்பாளர் யார் ?
அங்குசம் சிறப்பு செய்தியாளர் குழு.