விசாரணைக்கு வந்தவர் திடீர் மரணம்!
சேலம் மாநகர் பகுதியில் வீரசம்பு என்பவர் பத்திர எழுத்தாளராக பணியாற்றி வருகிறார். இவரது அலுவலகம் சேலம் டவுன் ரயில்வே நிலையம் அருகே அமைந்துள்ளது. இவரிடம் தம்மம்பட்டி பகுதியைச் சேர்ந்த துரைசாமி(65) என்பவர் பணியாற்றி உள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக வீரசம்புவின் பழைய இருசக்கர வாகனத்தை துரைசாமிடம் விற்று உள்ளார். அதற்கான பணம் கொடுக்காமல் இருந்த நிலையில் நேற்றைய தினம் வீரசம்பு, நேரில் துரைசாமியை பார்த்துள்ளார். ஏன் பணம் தரவில்லை என்று கூறி வீரசம்பு, துரைசாமிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வீரசம்பு ஆட்டோவில் வைத்து துரைசாமியை,சேலம் டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சேலம் டவுன் காவல் நிலையத்திற்கு துரைசாமி வந்தபோது,காவல் நிலைய வளாகத்தில் அமர வைக்கப்பட்டுள்ளார். அப்போது விசாரணையில் இருசக்கர வாகனத்தில் திருப்பி தந்து விடுவதாக ஒப்புக்கொண்டு, எழுதி தர சம்மதம் தெரிவித்துள்ளார். அப்போது திடீரென துரைசாமி மயங்கி விழுந்துள்ளார். பின்னர் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர் துரைசாமி ஏற்கனவே உயிர் இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனை செய்த பிறகு உறவினரும் ஒப்படைக்கப்பட்டது. மேலும் துரைசாமி உயிரிழப்பு தொடர்பாக சந்தேக மரணம் 174 வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் தரப்பில் கூறுகையில், திடீரென மயக்கம் போட்டு துரைசாமி விழுந்ததாகவும், பின்னர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.