தங்க கட்டிகள் திருட்டு! மடக்கி பிடித்த போலீஸ்!
மகாராஷ்டிராவை சேர்ந்த விக்டல் என்பவர் தூத்துக்குடியில் உள்ள வைஷ்ணவி தங்க சோதனை செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி 298 கிராம் எடை கொண்ட தங்க கட்டியை திருடிக் கொண்டு திருநெல்வேலியில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் தப்பி செல்வதாக சேலம் ரயில்வே துறை காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சேலம் ரயில்வே காவல்துறையினர் மற்றும் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோர் இணைந்து திருநெல்வேலியில் இருந்து மும்பை தாதர் செல்லும் ரயிலை சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்ட போது அதில் இருந்த விக்டல் என்பவனை கைது செய்து அவளிடம் இருந்த 298 கிராம் எடை கொண்ட தங்க கட்டியையும் 43 ஆயிரம் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்து தூத்துக்குடி மத்திய காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து வீரப்பன் தலைமையிலான தனிப்படையிடம் ஒப்படைத்தனர்.