உலக நலன் வேண்டி 1008 சங்காபிஷேக வழிபாடு!

சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஓம் வடிவில் 1008 சங்காபிஷேகம் நேற்று நடைபெற்றது.

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தில் சங்கில் புனித நீர் நிரப்பி அந்த தீர்த்தத்தை கங்கையாக பாவித்து சங்கு அபிஷேகம் செய்வது வழக்கம். சங்கு செல்வத்தின் சின்னம், வற்றாத பொருள் செல்வம் வேண்டும், மேலும் இறைவனின்  அருள்செல்வம் உலக மக்களுக்கும், உலகத்திற்கும் கிடைக்க வேண்டும் என மாரியம்மனுக்கு 1008 சங்குகளில் ஓம் வடிவில் இருந்த புனித நீரால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் செய்தனர்.

இந்த சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர்/செயல் அலுவலர் இளங்கோவன் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி, பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து சாத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

—   மாரீஸ்வரன்

Comments are closed, but trackbacks and pingbacks are open.