தமிழ்நாடு அரசு பட்டியலின மற்றும் பழங்குடியினர் ஆணையக்குழுவில் இப்படிப்பட்ட நபரா ?
பாஜக எல்.முருகனின் பக்தன்!
எடப்பாடியின் தொண்டன்!
ஊழல் மணியின் கைக்கூலி!
செல்வகுமார் என்பவர் உறுப்பினர் ஆக்கப்பட்டிருக்கிறார்!!
இவர், தலைவர் கலைஞர் அவர்கள் அருந்ததியருக்கு 3%உள் இட ஒதுக்கீடு கொடுத்ததற்கு என் தலைமையில் கோவையில் நன்றி பாராட்டும் விழா நடந்த பொழுது….
“கருணாநிதி ஏமாற்றுகிறார்” என்று அன்றைய சபாநாயகர் தனபாலுடன் சேர்ந்து கொண்டு வால் போஸ்டர் அடித்தவன்.
பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் அமைந்துள்ளதாக பாஜக எல்.முருகன் தேசிய SC/ST ஆணையத்தில் இருந்தபோது அதற்கும் தலைவர் கலைஞர் குறித்து தரக்குறைவாக விமர்சித்து வால் போஸ்டர் ஒட்டியவன்.
ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை காக்கா பிடித்துக்கொண்டு எந்த ஆட்சி அமைந்தாலும் அந்த ஆட்சிகளில் பதவியை வாங்கிக் கொண்டு, ரேசன் அரிசியை கடத்தி, காமராஜபுரம் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டு அதிகாரிகளால் தப்பிவிக்கப்பட்டவன்.
இந்தமாதிரி பாஜக, அதிமுக சங்கிக்கு தற்போது இந்த பொறுப்பு கிடைக்கப்பெற இந்த அயோக்கியனை பரிந்துரைத்த கோவை மாநகர மாவட்ட செயலாளர் மீதும் இந்த ஆசாமிக்காக ஒத்துழைத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாளைக்கே முரசொலி அலுவலக பிரச்னையை தேசிய SC/ST ஆணையம் நடவடிக்கை எடுத்தால்….. இந்த சந்தர்ப்பவாதி நமது கழகத்திற்கும், கழக ஆட்சிக்கும் எதிர்ப்பாக அல்லவா செயல்படுவான்.?
இந்த ஆசாமியை அருந்ததியர் எனும் வகுப்பின்கீழ் நியமித்துள்ளனர். இவனுக்கு கொள்கையோ, கோட்பாடோ, உண்மையோ, நேர்மையோ, நம்பகத்தன்மையோ எதுவும் கிடையாது.
இயல்பிலேயே தி.மு.க.வுக்கு எதிரான சிந்தனைகளைக் கொண்டவன். சந்தர்ப்பவாதி.
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கூட பாஜக அண்ணாமலைக்காக பிரச்சாரம் செய்து வாக்குசேகரித்தவன். அதற்கு முன்னாள் 2021 சட்டமன்றத்தேர்தலில் வானதி சீனிவாசனுக்காக வாக்கு சேகரித்தவன்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஆனால் பரம்பரையாக தி.மு.கழக குடும்பத்தில் பிறந்து வளர்ந்து மூன்று நான்கு தலைமுறைகளாக தி.மு.க.வுக்கு உழைந்த அருந்ததியர்கள் தகுதியும், திறமையும், சித்தாந்தப்பிடிப்புகளும் கொண்டு உழைக்கின்றவர்களை தவிர்த்துவிட்டு இந்த சங்கிப்பயலை முன்னிறுத்தி உறுப்பினராக அறிவிக்கச் செய்துள்ளனர்.
ஏற்கனவே 2021ல் இக்குழுவில் மரியாதைக்குரிய எழுத்தாளர் எழில் இளங்கோவன் அவர்களை அறிவித்து, பிறகு வயது மூப்பின் காரணத்தால் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அக்குழு அருந்ததிய பிரதிநிதித்துவம் இல்லாமலேயே முடிந்து போனது.
தற்போது மேற்கண்ட குற்றச்சாட்டுகளைக் கொண்ட ஆசாமியை நியமிக்கச் செய்துள்ளனர் சாணக்ய ஐ.எ.எஸ்.அதிகாரிகள்.
இதனால் மேற்கு மண்டல அருந்ததியர்கள் பெரிய அளவில் திருப்தி அடையவில்லை. மாறாக மிகுந்த மனவருத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நியமனம் குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது சமூக அக்கறையுள்ளவா்களின் கருத்தாகும்.
— G .T .ராஜேந்திரன் .