மதுரை – ரத்தம் சொட்ட சொட்ட மாணவரை தாக்கிய சக மாணவர்கள் !
மதுரை தெப்பக்குளம் பகுதி பேருந்து நிலையத்தில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் மோதல் உடன் படிக்கும் மாணவர்களை கும்பலாக சேர்ந்து தாக்கும் வீடியோ காட்சிகள், கற்களை தூக்கி எறிந்து வீசும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகரின் முக்கிய பகுதியான தெப்பக்குளத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த அரசு உதவி பெறும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ காட்சியில் பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவரை தாக்கிக் கொள்கின்றனர். மேலும், இரண்டு மாணவர்களை கும்பலாக சேர்ந்து இரண்டு குழுக்களாக பிரித்து ஐந்துக்கும் மேற்பட்டோர் ஒரு மாணவரை சரமாரியாக தாக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.
தொடர்ந்து ஒரு கட்டத்தில் கற்களை எடுத்து தூக்கி வீசும் காட்சிகள் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொள்ளும் காட்சிகள் தற்போது வேகமாக பரவி வருகிறது.
24 மணி நேரமும் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் இருந்து வரும் வேலையில் ஒரே பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கும்பலாக சேர்ந்து இரண்டு மாணவர்களை தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும், பள்ளி மாணவர்களின் இத்தகைய செயல் கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
— ஷாகுல், படங்கள் ஆனந்தன்.