அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மிக மிக முக்கியமான விஷயம் !

திருச்சியில் அடகு நகையை விற்க

ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. “நீங்க ஆழி மழை கண்ணன் அப்பாவா?” என்றார் தொலைபேசியில் பேசிய ஒரு பெண்மணி. ஆமாம் என்றதும், “போன வருஷம் பையனுக்கு டிசி வாங்கிருக்கீங்க, இப்ப வேற ஸ்கூல்ல சேத்திருக்கீங்களா? அந்தத் தகவலைக் குடுக்க முடியுமா ” என்றார்.

தொடர்ந்து பேசியதில், அவர் தமிழ்நாடு அரசு கல்வித்துறையில் இருந்து  பேசுவதாகவும், ஸ்பெஷல் ஆஃபீஸர் என்றும் தெரிய வந்தது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

நான் ஆழி மழை கண்ணனை புதிதாக சேர்த்த பள்ளி விவரங்களைச் சொன்னேன். குறித்துக்கொண்டார்.

அதன் பின் ஆச்சரியமாக , ” எப்படி ஆழை மழை கண்ணன் எனப் பெயர் வைத்தீர்கள்” என வினவினார்.

Admission Enquiry Form

“நான்லாம் பெருசா யோசிக்கலைங்க. ஆண்டாள் தான் காரணம்” எனச் சொல்லி உரையாடல் தொடர்ந்தது. இந்த உரையாடல் தொடர ஆழி மழை கண்ணன் என்ற பெயர் ஒரு முக்கியக் காரணமாக இருந்ததால் எம்பெருமானுக்கு ஒரு நன்றியைப் போட்டு விட்டு பதிவைத் தொடர்கிறேன்.

அவரின் பெயர் பிரபாவதி. தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்று இப்போது சென்னை மாவட்டத்துக்கு ஸ்பெஷல் ஆஃபீசராக பதவி ஏற்றுக்கொண்டு இருக்கிறார். இவருடைய முக்கியமான பணி…

பள்ளிக் கல்வியை நடுவில் விட்டக் குழந்தைகளைக் கண்டறிதல். அது அரசுப் பள்ளியோ, தனியார் பள்ளியோ, இடைநின்ற குழந்தைகளைக் கண்டறிந்து அந்தக் குழந்தைகளின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு மீண்டும் ஏதேனும் ஒரு அரசுப் பள்ளியில் சேர்த்தல்.

கல்வி: பள்ளி இடைநிற்றல் விகிதம் அனைத்து நிலைகளிலும் குறைந்து வருகிறது என்று  அரசு | டைனமைட் செய்திகள்இதற்காக ஒட்டு மொத்தப் பள்ளிகளிலும் டிசி வாங்கிய குழந்தைகள் மற்றும் தொடர்ந்து பள்ளிக்கு வராத குழந்தைகளின் டேட்டா சேகரிக்கப்படுகிறது என நினைக்கிறேன். மாவட்ட வாரியாக இதற்கு அலுவலர்கள் இருக்கிறார்கள். இந்தத் திட்டத்திற்கு ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி தலைமை. திருமதி. பிரபாவதி என்னிடம் தெரிவித்த தகவல்கள்.

சென்னையில் யார் வேண்டுமானாலும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

சென்னையில் எந்த அரசுப்பள்ளியிலும் குழந்தைகளைச் சேர்க்க நான் உதவி செய்வேன். நானே சம்மந்தப்பட்ட பள்ளிக்கு போன் செய்து சேர்த்துக்கொள்ளச் சொல்வேன். அட்மிஷனை உறுதி செய்வேன்.

சிங்கிள் பேரண்ட் குழந்தை அல்லது ஏழைக் குழந்தை , படிக்க வைக்க வசதி இல்லாத குழந்தைகளுக்கு என் ஜி ஓ மூலம் பணமும் ஏற்பாடு செய்து கொடுப்பேன்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்தவர்களும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

பள்ளி மட்டுமன்றி , கலை , அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் , ஐ டி ஐ , டி ஃபார்ம் போன்ற டிப்ளமா படிப்புகள் என எந்தத் தேவைக்கும் என்னைத் தொடர்பு கொள்ளலாம். அரசு கல்லூரிகளில் இடம் வாங்கிக் கொடுத்து படிப்பைத் தொடர்வதற்கு உதவி செய்வேன்.

இது அல்லாமல் குழந்தைகள் ஆன்லைன் கேம், யு டியூப் , சோஷியல் மீடியா என அடிக்ட் ஆகி இருந்தாலோ அல்லது பருவ வயது மனச் சிக்கல்களில் இருந்தாலோ, எங்கள் குழுவில் இருக்கும் சைக்யாட்ரிஸ்ட் டாக்டர் மூலம் உதவிகள் செய்து குழந்தைகளை மீட்டெடுப்போம்.

அவர் சொன்ன தகவல்களில் இருந்து அரசு இந்த விஷயத்தில் தீவிரமாக இருப்பது தெரிய வந்தது. அரசின் தீவிரம் உயர் அதிகாரிகளுக்கும் பரவி , அவர்களுக்குக் கீழே இருப்பவர்களுக்கும் பரவி இருப்பது அவரின் பேச்சில் தெரிந்தது.

எங்கள் உரையாடலின் போது,  ஒரு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் அலுப்பு  எங்கும் தட்டுப்படவில்லை. புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணின் உற்சாகம் தான் அவரின் பேச்சு முழுக்க எதிரொலித்துக்கொண்டு இருந்தது.

தான் ஒரு சமூகச் சேவை செய்கிறோம், ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கான அச்சாணிகளில் ஒருவராக இருக்கிறோம் என்ற பெருமையும் பொறுப்புணர்வையும் அவரது பேச்சில் உணர்ந்தேன்.

இப்போதெல்லாம் சேட்டிஸ்ஃபேக்‌ஷன் என அடிக்கடி பேசுகிறோம். ஆனால் எத்தனை லட்சங்கள் சம்பளம் வாங்கினாலும் பெரும்பாலானோர் கூலிக்கு மாரடிக்கும் வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறோம். சிலருக்கு அவர்கள் செய்யும் வேலையில், அதன் பர்ஃபெக்‌ஷன் காரணமாக தனிப்பட்ட திருப்தி வரலாம். ஆனால் தான் செய்யும் வேலை மற்ற பலருக்கு உதவியாக இருக்கிறது, பலரின் வாழ்வில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வர இருக்கிறது என்பது தெரியும் போது வரும் ஜாப் சேட்டிஸ்ஃபேக்‌ஷன் வேற லெவலில் இருக்கும். அதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.

அரசு சார்பில் அவருக்கு மாதம் ஒரு தொகை ஊதியமாகக் கொடுப்பார்கள். ஆனால் அதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே இல்லை. தான் செய்யும் வேலையில் அவ்வளவு திருப்தியுணர்வும் பெருமையும் பொங்குகிறது அவருக்கு. அதனால் தான் வயது கொடுக்கும் அயற்சியைத் தாண்டி அவ்வளவு புத்துணர்ச்சியுடன் வேலை செய்கிறார்.

நான் தான் பெருமை என்றெல்லாம் சொல்கிறேனே ஒழிய, அவர் மற்றவர்களுக்கு கல்வி சார்ந்து உதவும் இந்த பொறுப்பை இறைவன் அவருக்குக் கொடுத்த ஒரு வாய்ப்பாகக் கருதுகிறார். அதை பணிவுடன் தெரிவிக்கவும் செய்தார்.

இறை நம்பிக்கை இல்லாத அரசு ஆட்சி செய்யும் மாநிலத்தில் இறை நம்பிக்கைக் கொண்ட அதிகாரிகள்  ஆத்மார்த்தமாக இணைந்து பணி செய்வதைக் காணும் போது, ஆத்திகம் நாத்திகம் எல்லாம் பின்னுக்குப் போகிறது. இந்த நம்பிக்கைகள் எல்லாம் முக்கியமே அல்ல. என்ன பணி செய்கிறீர்கள்? அதனால் உண்டாகும் விளைவுகள் என்ன என்பதுதான் முன்னுக்கு வருகிறது. கொள்கைகள் எல்லாம் நம்பிக்கை , மதம் சார்ந்து இருப்பதை விட மக்கள் சார்ந்து, வளர்ச்சி சார்ந்து, முன்னேற்றம் சார்ந்து இருத்தல் அரசியலில் நல்லது.

—     Araathu R

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.