ஆத்திர அவசரத்துக்கு பஸ் புடுச்சு தான் போயிட்டு வரனும் போல ! அலறும் மணப்பாறை மக்கள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஆத்திர அவசரத்துக்கு பஸ் புடுச்சு தான் போயிட்டு வரனும் போல !

முறுக்குக்கு பெயர் போன மணப்பாறைக்கு அன்றாடம் வந்து செல்லும் பயணிகள் ஆத்திர அவசரத்திற்கு ஒதுங்க இடம் இல்லாமல், பெரிதும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மணப்பாறை வட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே, சார்பதிவாளர் அலுவலகம், கருவூலம், சட்டம் ஒழுங்கு காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம், வட்ட உணவு வழங்கல் அலுவலகம், கிளை சிறைச்சாலை என அடுத்தடுத்து பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

ரேஷன் கார்டு பிரச்சினை, முதியோர் பென்சனுக்காக மனுபோடுவது, பட்டா தொடர்பான சிக்கல், வாய்க்கால் வரப்புத் தகராறு, பென்சன் தொடர்பான முறையீட்டுக்காக கருவூலத்தை நாடும் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் என வயது வித்தியாசமின்றி அவர்களின் பல்வேறு தேவைகளுக்காக பலதரப்பட்ட நபர்களும் வந்து செல்லும் வளாகமாக, மணப்பாறை வட்டாட்சியர் அலுவலக வளாகம் அமைந்துள்ளது.

மாணப்பாறை
மணப்பாறை

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

மணப்பாறை நகருக்கு அதன் அருகாமை பகுதிகளான மருங்காபுரி, புதுக்கோட்டை மாவட்டம் ராஜளிப்பட்டி, கரூர் மாவட்டம் தோகைமலை ஆகிய பகுதிகளிலிருந்து பல்வேறு தேவைகளுக்காக அன்றாடம் மணப்பாறைக்கு வந்து செல்கின்றனர்.

இத்துணை பேர் அன்றாடம் வந்து செல்லும் ஒருங்கிணைந்த அரசு அலுவலக வளாகத்தில் அவசரத்திற்கு ஒதுங்க இடமில்லாமல் இருப்பது அவலமான ஒன்று. நீரிழிவு நோய் உடையவர்கள், வயதானவர்கள், அதிலும் குறிப்பாக பெண்கள் படும்பாடு வார்த்தைகளில் விவரிக்க இயலாதது. மாற்றுத்திறனாளிகள் இந்த வளாகத்திற்குள் நுழையாமல் இருப்பது உத்தமம்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

”இருக்கு… ஆனா, இல்லை” என்ற கதையாக கழிவறைகள் என்ற பெயர் தாங்கிய கட்டிடங்களும் இந்த வளாகத்தில் இருக்கின்றன. கேட்பாறின்றி திறந்துக்கிடக்கும் கழிவறைக்குள் நுழைந்தால், தொற்று நோய் தாக்குதலுக்கு ஆளாவது நிச்சயம். பராமரிப்பின்றி கிடக்கும் கழிவறை குழாய்களில் தண்ணீர் வந்தே பல மாதங்கள் ஆகியிருக்கும் போல. ”எனக்கெதுக்கு வம்பு? அக்கடானு நான் தனியே கிடக்கிறேன்”னு தன்னைத் தேடி அலைபவரை பார்த்து ஏளனமாய் சொல்வதைப் போல, பூட்டி வைக்கப்பட்டிருக்கிறது அதன் அருகிலிருக்கும் மற்றொரு கழிவறை வளாகம்.

நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அன்றாடம் வந்து செல்லும் அரசு அலுவலக வளாகத்தில், ”போதுமான கழிவறை வசதி இல்லை; பெயருக்கு திறந்திருக்கும் கழிவறையும் பயன்படுத்த இலாயக்கில்லை” என்ற கேள்வியோடு மணப்பாறை தாசில்தாரிடம் முறையிட்டோம். ”கழிவறைகளை பராமரிப்பதற்கு ஏற்ப எங்களிடம் போதுமான பணியாட்கள் இல்லை. மணப்பாறை நகராட்சி நிர்வாகத்திற்கு ஆள் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறோம்.” என்கிறார் அவர். ”உங்களது வளாகத்திற்குள் அமைந்துள்ள கழிவறையை நீங்கள்தானே பராமரிக்க வேண்டும்.?” என்றோம். ”கட்டிடம் கட்டியது, பொதுப்பணித்துறை. பராமரிப்பு நகராட்சி நிர்வாகம். இதில் எங்களுக்கு எந்த பங்குமில்லை.” என தன்னால் ஆவது ஒன்றுமில்லை என்பதுபோல, கையை விரிக்கிறார் தாசில்தார்.

மாணப்பாறை
மணப்பாறை

சரி, பஸ்டாண்டு பக்கமாவது சென்று ஒதுங்கலாம் என சுற்றும் முற்றும் தேடினோம். “ப” வடிவில் அமைந்திருக்கும் மணப்பாறை பேருந்து நிலையத்தின் சுற்றுச்சுவர் நெடுகிலும் தங்கப்பாறைகள் போல, மஞ்சளேறிக்கிடந்தது. அவனவன் பிரச்சினை அவனுக்கு என்பது போல, கடந்து செல்லும் எவனையும் கண்டுக்கொள்ளாமல் தங்களது அவசரத்தை இறக்கி வைத்துக்கொண்டிருந்தார்கள் வயதான சில பெரிசுகளும் பஸ் கண்டக்டர்களும்.

இறுதியாக கண்ணில் பட்டது, ”கட்டண கழிவறை” பெயர்ப்பலகை. தூரத்தில் இருந்த போதே, கிட்டே நெருங்கி வராதே என்று எச்சரித்தது அங்கிருந்து கிளம்பி நாலாபுறமும் படையெடுத்த துர்நாற்றம். அதனையும் மீறி, அருகில் சென்றோம். “எடு ஆளுக்கு பத்து ரூபாயை” என்றார், கட்டண வசூலிப்பவர். அங்கே பிடித்த ஓட்டம்தான், பஸ் பிடிச்சி ஊரு போயி சேரும் வரைக்கும் திரும்பிக்கூட பார்க்கலியே…!

– மு.சுலைமான், மணப்பாறை.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.