இப்படி பண்ணா … எங்க பொழப்பு என்னாகுறது?
வாகன சோதனையின்போது, வணிகர்கள் தங்கள் வியாபாரத்திற்காக ரூபாய் 50,000-க்கும் மேல் எடுத்து செல்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்று, எஸ்டிபிஐ கட்சியின் வர்த்தக பிரிவு சார்பில் திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையின் போது வியாபாரிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். காரணம் வியாபாரிகளிடம் கையிருப்பு 50,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்கின்ற விதியின் படி அன்றாடம் வணிகத்திற்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்வதற்காக கடைவீதிகளுக்கு செல்லுகின்ற பொழுது இந்தத் தொகை போதுமானதாக இல்லை.
எனவே, 50 ஆயிரம் என்கின்ற தேர்தல் விதிமுறையை மாற்றி கூடுதலாக கொண்டு செல்ல வகை செய்கின்ற வகையில் தேர்தல் அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும். ஏற்கனவே உணவகங்கள் மற்றும் வணிகம் சார்ந்த பல்வேறு பயன்பாடுகளுக்கு கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவிக் கொண்டிருக்கின்ற இக்காலச் சூழலில், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்ற வணிகர்களின் நிலைகளை தயவு கூர்ந்து கவனத்தில் கொள்ளுமாறு தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்கிறோம்.
வணிகர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்ற இச்சூழலில் தேர்தல் முடிகின்ற வரை இன்னும் பல சிரமங்களை எதிர் நோக்க வேண்டிய இருக்கின்ற காரணத்தினால், எதிர் வர இருக்கின்ற மாதம் வணிகர்களிடமிருந்து பெறப்படும் ஜிஎஸ்டி வரியில் சலுகை அல்லது தள்ளுபடி செய்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் முபாரக் அலி திருச்சி மாவட்ட தலைவர் பக்ருதீன் மாநில செயற்குழு உறுப்பினர் ஷேக் அலாவுதீன் மாவட்ட செயலாளர் தென்னூர் அப்துல் மாலிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.